சலங்கையாட்டம்

கொங்கு மண்டலத்தில் நடைபெறும் ஒரு வகை ஆட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சலங்கையாட்டம் தமிழ் நாட்டின் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊர்களில் நடைபெறும் ஒருவகை ஆட்டம் ஆகும். சலங்கையாட்டம் பண்டிகை காலங்களில் இரவில் உள்ளூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கும் சுற்றி ஆடப்படுகிறது. சலங்கையாட்டத்திற்கான இசை தாரை, தப்பட்டை, மத்தாளம், பம்பை மற்றும் நாயனத்தைக் கொண்டு வாசிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள், காலில் சலங்கைகளை கட்டிக்கொண்டு ஆடுவதால் சலங்கையாட்டம் என்று வழங்கப்படுகிறது.[1][2] சலங்கையாட்டம் நடைபெறும் அனைத்து ஊர்களிலும் இந்த ஆட்டம் பொதுமக்களாலே ஆடப்படுகிறது, இதற்கென்று, தனிக் கலைஞர்கள் இலர்.

நாமக்கல் மாவட்டத்தின் சிங்களாந்தபுரத்தில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவின் பொழுது சலங்கையாட்டம் நடைபெறுகிறது, இங்கு நடைபெறும் சலங்கையாட்டம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் மட்டும் ஆடப்படுகிறது, ஆனால், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சலங்கையாட்டங்கள், பெரும்பாலும் அனைத்து சமூகத்தினராலும் ஆடப்படுகிறது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எல்லா கோவில் திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கிய இடம் பெறுகிறது. முருகன் திருவிழா, மாரியம்மன் திருவிழா, ஊா் திருவிழா, குரும்பா் இன மக்களின் வீரபத்திரசாமி திருவிழா, அங்காளம்மன் திருவிழா, தேரோட்டம், குண்டம் திருவிழா போன்ற அனைத்து திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads