சலந்தரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சலந்தரன் என்பவர் ஜலத்திலிருந்து தோன்றிய அரக்கன் ஆவார்.[1] சிவபெருமானை வணங்கி யாராலும் வெல்ல இயலாத வரத்தினைப் பெற்றார். இந்திரனை வென்று தேவலோகத்தினையும், பிரம்மனை வென்று சத்திய லோகத்தினையும், திருமாலையும் வென்று பாற்கடலையும் பெற்றார். அத்துடன் சிவபெருமானை வெல்ல கையிலைக்கு வந்தார். அங்கு சிவபெருமான் தன்னுடைய கால் விரலால் ஒரு சக்கரமொன்றை வரைந்து அதை எடுத்து சலந்தரனின் திறனை நிறுபிக்க கூறினார். சலந்தரன் அந்நிலத்தினை பெயர்த்து கழுத்துக்குமேல் கொண்டு செல்லும் பொழுது, சிவபெருமானால் வரையப்பட்ட சக்கரம் சக்கராயுதமாக மாறி சலந்தரனைக் கொன்றது. இவரைப் பற்றி இலிங்க புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
சலந்தரனைக் கொன்றமையால் சிவபெருமான் சலந்தராகரர் என்று அறியப்படுகிறார்.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads