சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மட்டை பந்து விளையாட்டரங்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் (Sawai Mansingh Stadium, Hindi: सवाई मानसिंह स्तादियम) இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தின் செய்ப்பூர் நகரில் உள்ள ஓர் துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். இது செய்ப்பூரின் மகாராசா சவாய் மான் சிங் II காலத்தில் கட்டப்பட்டதால் அவரது பெயர்ச்சுருக்கத்தைக் கொண்டு எஸ்எம்எஸ் (SMS) விளையாட்டரங்கம் எனப்படுகிறது. இது இராம்பாக் வட்டத்தின் ஒரு முனையில் அமைந்துள்ளது. 30,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய இந்த விளையாட்டரங்கம் 2006இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு இநிதயாவின் சிறந்த துடுப்பாட்ட விளையாட்டரங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது.
Remove ads
ஆட்டங்கள்
இங்கு ஒரே ஒரு தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டமே நடந்துள்ளது; இந்திய அணிக்கும் பாக்கித்தான் அணிக்கும் இடையே பெப்ரவரி 21, 1987இல் நடந்த அந்தத் தேர்வின் இரண்டாம் நாள் ஆட்டத்தைக் காண அந்நாளைய பாக்கித்தான் அதிபர் ஜெனரல் சியா-உல்-ஹக் எல்லை கடந்து வந்தார். இது அவரது "அமைதிக்காக துடுப்பாட்டம் " என்ற முனைப்பின் அங்கமாக இருந்தது. இந்த தேர்வாட்டத்தின் சிறப்பங்கமாக 17 ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த யூனிஸ் அஹ்மத் விளையாடத் திரும்பியதும் சுனில் காவஸ்கர் ஒரு தேர்வாட்டத்தில் முதல் பந்திலேயே வெளியேற்றபட்ட நிகழ்வும் அமைந்திருந்தன. மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்தநாள் ஆட்டத் துவக்கத்தில் ஆடுகளத்தில் மரத்தூள் தூவியதற்கு பாக்கித்தான் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து ஆட்டம் சமனாக முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த விளையாட்டரங்கத்தில் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டமும் இந்த இரு அணிகளுக்கிடையே அக்டோபர் 2, 1983 அன்று துவங்கியது. தங்களது முதல் உலகக் கிண்ணத்தை வென்றிருந்த இந்திய அணி இந்த ஆட்டத்தை எளிதில் வென்றது. 1987 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இந்த விளையாட்டரங்கிலும் ஆட்டங்கள் விளையாடப்பட்டன. ஒருநாள் துடுப்பாட்டங்களில் இந்த மைதானத்தில் தனி மட்டையாளர் அடித்த மிகக் கூடிய ஓட்டங்களை,183 (வெளியேறாது) மகேந்திர சிங் தோனி அடித்துள்ளார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads