சியா-உல்-ஹக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெனரல் முகமது சியா-உல்-ஹக் (உருது: محمد ضیاءالحق) (1924 ஆகத்து 12 – 1988 ஆகத்து 17) பாக்கித்தான் நாட்டின் அரசுத்தலைவராக சூலை 1977 முதல் ஆகத்து1988 வரையில் ஆட்சி புரிந்தவர்.[1] 1976-ஆம் ஆண்டில் அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட இவர் 1977 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி மூலம் அன்றைய பிரதம மந்திரி சூல்பிகார் அலி பூட்டோ தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஆட்சிக்கு வந்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். செப்டம்பர் 1978 இவர் நாட்டின் அதிபரானார்.
இவர் 1988-ஆம் ஆண்டு ஆகத்து 17-இல் இடம்பெற்ற சந்தேகத்துக்கிடமான வானூர்தித் தீநேர்வு (விபத்து) ஒன்றில் இவருடன் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்க தூதர் ஆர்னல்ட் ராஃபெல்லுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads