சவிதா ராதாகிருஷ்ணன்

இந்தியக் குரல் கலைஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சவிதா ராதாகிருஷ்ணன் (Savitha Radhakrishnan) இந்தியத் திரைப்படத்துறையில் பணியாற்றும் பின்னணி குரல் கலைஞர் ஆவார்.

விரைவான உண்மைகள் சவிதா ராதாகிருஷ்ணன்Savitha Radhakrishnan, பிறப்பு ...

தொழில் வாழ்க்கை

சவிதா, நடிகை சுஜிதா குழந்தையாக நடித்த ஒரு படத்தில் பின்னணி குரல் கொடுத்து அறிமுகமானார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குரல் நடிகராகவும் பல படங்களில் தொடர்ந்தார். பின்னர் 1992இல் வெளியான அன்னை வயல் படத்திற்காக நடிகை வினோதினிக்கு குரல் அளித்தார். ஜீன்ஸ் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்திற்கு குரலை வழங்கியது இவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தது.[1][2] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விளம்பரத்தில் தேர்ச்சி பெற்ற பட்டதாரியாவார். தெலுங்கில், கலிசுன்டம் ரா படத்தில் நடிகை சிம்ரனுக்காக குரல் அளித்தார். பின்னர் இவர் சிம்ரனின் அனைத்து படங்களுக்கும் பின்னணி குரல் கொடுத்தார். பின்னர், திரிஷா, ரிச்சா பலோட் மற்றும் ஜோதிகா போன்ற நடிகைகளுக்கும் தொடர்ந்து குரல் அளித்து வருகிறார்.[3] துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், தூல், சந்திரமுகி மற்றும் சில்லுனு ஒரு காதல் ஆகியவை இவரது முக்கிய படைப்புகள் ஆகும். தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடிகை அமலா பாலுக்கும் அதே படத்தில் குழந்தையாக நடித்த சாரா அர்ஜுனுக்கும் குரல் கொடுத்தார்.[4]

இவர் சந்திரமுகி என்ற தமிழ் படத்தில் ஜோதிகா படத்திற்காக குரல் கொடுத்தார். பின்னர் சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத்துக்கு பின்னணி குரல் அளித்தார். பார்த்திபன் கனவு படத்தில் நடிகை சினேகாவின் இரட்டை வேடத்தில் ஒரு வேடத்திற்கு பின்னணி குரல் கொடுத்தார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads