சந்திரமுகி 2
பி. வாசு இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரமுகி 2 (Chandramukhi 2) 2023ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான ஒரு நகைச்சுவைத் திகில் திரைப்படமாகும். இது சந்திரமுகியின் (2005) தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், சுபிக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜூன் 2022-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி சூலையில் தொடங்கியது. ஆகத்து 2023 நடுப்பகுதியில் படப்படிப்பு முடிவடைந்தது. எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே ஆர். டி. ராஜசேகர் மற்றும் ஆண்டனி ஆகியோர் செய்திருக்கின்றார்கள்.
சந்திரமுகி 2 திரைப்படம் 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
கதைக்கரு
ஒரு பணக்காரக் குடும்பம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது பிரச்சினைகளைத் தீர்க்கத் தங்களது குலதெய்வத்தை வழிபட நீண்ட காலமாக பிரிந்திருந்த உறவினர்களுடன் இணைந்து கிராமத்திற்குச் செல்கின்றது அந்தக் குடும்பம். இதனால் நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரம்பரிய நடனக் கலைஞர் சந்திரமுகி மற்றும் வேட்டையன் ராஜா இடையேயான பகையை மீண்டும் எழும்புகிறது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சந்திரமுகியின் ஆவியாலும் வேட்டையன் ராஜா ஆவியால் மற்றொருவரும் சிக்கி இருக்க இந்தப் பிரச்சினையில் இருந்து அந்தக் குடும்பம் எப்படி மீண்டது என்பது கதைக்கருவாக இருக்கின்றது.
Remove ads
நடிகர்கள்
- பாண்டியன் & வேட்டையன் என்கிற செங்கோட்டையன் என இரட்டை வேடத்தில் ராகவா லாரன்ஸ்
- லட்சுமி மேனன் திவ்யா & சந்திரமுகி (உடைமை) என இரட்டை வேடம்
- சந்திரமுகியாக கங்கனா ரணாவத்
- முருகேசனாக வடிவேலு
- ரங்கநாயகியாக ராதிகா சரத்குமார்
- லட்சுமியாக மஹிமா நம்பியார்
- பிரியாவாக ஸ்ருஷ்டி டாங்கே
- காயத்ரியாக சுபிக்ஷா
- குணசேகரனாக மிதுன் ஷியாம்
- ருத்ரய்யாவாக, செங்கோட்டையனின் மகாகுருவாக அய்யப்ப பி.சர்மா
- ரங்கநாயகியின் தம்பியாக விக்னேஷ்
- ரங்கநாயகியின் தம்பியாக ரவிமரியா
- ரங்கநாயகியின் மூத்த சகோதரனாக சுரேஷ் மேனன்
- டிஎம் கார்த்திக் மேலாளராக
- குருஜியாக ராவ் ரமேஷ்
- ரியல் வேட்டையனாக சத்ரு
- கோபால் என்கிற கோபால் வேடத்தில் ஆர்.எஸ்.சிவாஜி
- கோவில் பூசாரியாக ஒய்.ஜி.மகேந்திரன்
- மனோபாலா போலி பேயோட்டுபவர்
- கூல் சுரேஷ் வீட்டு வேலைக்காரன்
- ஜூனியர் ரங்கநாயகியாக மானஸ்வி கொட்டாச்சி
- காஷ்வின் கார்த்திக்
- கங்காவாக ஜோதிகா (பிளாஷ்பேக்)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

