சவுந்தராயா

இராணுவத் தளபதி, கவிஞர் From Wikipedia, the free encyclopedia

சவுந்தராயா
Remove ads

சவுந்தராயா (Chavundraya) அல்லது சாமுந்தராயா, இவர் ஒரு இந்திய இராணுவத் தளபதியாக்வும், கட்டிடக் கலைஞராகவும், கவிஞராகவும் மற்றும் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் தலக்காட்டின் மேலைக் கங்கர் வம்சத்தின் அரசவையில் (இந்தியாவின் நவீன கர்நாடகாவில் உள்ளது.) பணியாற்றினார். பல திறமைகளைக் கொண்டவரான இவர், 982 ஆம் ஆண்டில் சமண மதத்திற்கான புனித யாத்திரைக்கான முக்கியமான இடமான சரவணபெலகுளாவில் , கோமதீசுவரர் என அழைக்கப்படும் பாகுபலியின் ஒற்றைக் கல் சிலையை நிர்மாணித்தார். இவர் சமண ஆச்சார்யா நேமிசந்திரர் மற்றும் அஜிதசேனன் பட்டாரகன் ஆகியோரின் பக்தராகவும் இருந்தார். மேலும் இரண்டாம் மாறசிம்ம சத்யவாக்யன் (963-975), நான்காம் இராசமல்ல சத்யவாக்யன், (975-986) மற்றும் ஐந்தாம் இராசமல்லன் (986–999) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.

Thumb
சந்திரகிரி மலையில் உள்ள சவுந்தரய ஜெயின் கோயில் (10 ஆம் நூற்றாண்டு)

ஒரு தைரியமான தளபதியான இவர், சாமர பரசுராமர் என்கிற பட்டப்பெயரில் அழைக்கப்பட்டார். அத்துடன், இலக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, இலக்கிய நூல்களை எழுதுவதற்கு நேரம் ஒதுக்கி, கன்னடம் மற்றும் சமசுகிருத மொழியில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் ஆனார். [1] [2] கன்னடத்தில் (978), சமசுகிருதத்தில் உள்ள சரிதரசரத்திலும், திரிசச்டி லக்சண புராணம் என்றும், சவுந்தராய புராணம் என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான உரைநடை ஒன்றை இவர் எழுதினார். இவர் புகழ்பெற்ற கன்னட இலக்கண வல்லுநர்களான, குணவர்மன், மற்றும் முதலாம் நாகவர்மன் ஆகியோரை ஆதரித்தார். கவிஞர் இராணா பரசுராம சரிதையை எழுதியது, இவரது புரவலரின் புகழ்ச்சியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது நீடித்த பல பங்களிப்புகளால், இடைக்கால கர்நாடக வரலாற்றில் சவுந்தராயா ஒரு முக்கியமான நபராக போற்றப்படுகிறார்.

Remove ads

தோற்றம்

இவரது எழுத்து, இவர் பிரம்மசைத்ரிய வம்சத்திலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. ( பிராமண சாதி சத்ரிய சாதியாக மாற்றப்படுகிறது). [3] மைசூர் மாவட்டத்தின் 10 ஆம் நூற்றாண்டின் அல்கோடு கல்வெட்டு மற்றும் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி கல்வெட்டு ஆகியவை சவுந்தராயாவின் குடும்ப வம்சாவளியைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது. சவுந்தராயா கோவிந்தமய்யா என்பவரின் பேரனாவாவார். இவர், அறிவு மற்றும் தர்மத்திற்காக பாராட்டப்பட்டவர். இரண்டாம் மாறசிம்ம மன்னரின் அடிபணிந்த மாபாலயாவின் மகன் ஆவார். கல்வெட்டில், மிகுந்த வலிமைக்காக மாபாலாயாவும் அவரது சகோதரர் இசராய்யாவும் பாராட்டப்படுகிறார்கள். [4] இரண்டாம் மராசிம்மனின் கீழ் அவர்களின் அரசியல் நிலைப்பாடு இந்த பிராமண குடும்பத்தால் சத்திரிய அந்தஸ்தை படிப்படியாக ஏற்றுக்கொள்ள வழிவகுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. [5]

சரவணபெலகுளாவில் உள்ள தியாகத பிரம்மதேவா தூணில்" சவுந்தராயாவைப் (இது சவுந்தராயாவையும் அவரது குரு நேமிச்சந்திராவையும் குறிக்கும் அழகிய வேலைப்பாடுகளையும் நிவாரணங்களையும் கொண்டது) பற்றி எழுதப்பட்டுள்ளது.

Remove ads

தளபதியாக

Thumb
கோமதீசுவரர் ஒற்றைக்கல் சிலை - சரவணபெலகுளா (982-983 CE),

இவர், இராஷ்டிரகூடர்களின் மேற்கு கங்கை நிலப்பிரபுத்துவத்தின் தளபதியாக, இராஷ்டிரகூட மன்னரான கொத்திக அமோகவர்சனின் ஆட்சி காலத்தில் தொடங்கி, அவர்களின் இராஷ்டிரகூட மேலதிகாரிகளுக்காக பல போர்களை நடத்தினார் . உண்மையில், மேலைக் கங்கர்கள் இராஷ்டிரகூடர்களை கடைசி வரை ஆதரித்தனர். [6] இராஷ்டிரகூட ஆட்சியின் கடைசி ஆண்டுகளில், கங்கர்களும் தொடர்ச்சியான உள்நாட்டு போர் அச்சுறுத்தலுக்கும், பெருகிய முறையில் சக்திவாய்ந்த சோழ வம்சத்தின் படையெடுப்புகளுக்கும் ஆளாகினர் . 975 இல் ஒரு உள்நாட்டு யுத்தம் வெடித்தபோது, சாதுந்தராய இளவரசர் நான்காம் இராசமல்லனை ஆதரித்து அவரை அரியணையில் அமர்ததினார். [7]

கி.பி 975 இல் பஞ்சல்தேவா மகாசமந்தா செய்த ஒரு கிளர்ச்சியை சவுந்தராயா அடக்கி, பாகேரூர் போரில் முதுராசையாவை வெற்றிக் கொண்டார். இவ்வாறு தனது சகோதரர் நாகவர்மாவின் மரணத்திற்கு முத்துராசய்யனை பழிவாங்கினார். இந்த போர்களின் மூலமாக, சவுந்தராயா தனது திறமையைக் காட்டியபோது, நான்காம் இராசமல்லன் கங்க சிம்மாசனத்தில் ஏறினார். மேலும், நான்காம் இராசமல்லன், சவுந்திராயாவின் வீரத்தைப் புகழ்ந்து, சமாரா பரசுராமன், வீர மார்த்தாண்டன், இரணரங்கசிம்மன், சமாரா துரந்தரன், வரிகுல கலடந்தன், பூஜா விக்ரமன் மற்றும் பட்டமாரன் ஆகிய பட்டங்களை வழங்கினார் . [8]

Remove ads

எழுத்துப்பணி

Thumb
சந்திரகிரி மலையின் மீது சவுந்தராயா கையெழுத்தில் (கன்னட கதாபாத்திரங்கள்) பொறிக்கப்பட்டுள்ளது சரவணபெலகுளா, கர்நாடகா

சவுந்தராயாவின் எழுத்து, சவுந்தராய புராணம், கன்னடத்தில் உரைநடை பாணியில் தற்போதுள்ள இரண்டாவது மிகப் பழமையான படைப்பாகும். இது இராஷ்டிரகூட அரசனான, முதலாம் அமோகவர்சனின் ஆட்சியில் ஜினசேனன் மற்றும் குணபத்ரன் ஆகியோரால் எழுதப்பட்ட சமசுகிருத படைப்புகளான ஆதிபுராணம் மற்றும் உத்தரபுராணம் ஆகியவற்றின் சுருக்கமாகும். தெளிவான கன்னடத்தில் இயற்றப்பட்ட இந்த உரைநடைப் பகுதி முக்கியமாக சாமானியர்களுக்கானதாகும். மேலும் சமணக் கோட்பாடுகள் மற்றும் தத்துவத்தின் சிக்கலான கூறுகள் பற்றிய எந்தவொரு குறிப்பையும் தவிர்த்தது. இவரது எழுத்தில், அவரது முன்னோடி ஆதிகவி பம்பா மற்றும் சமகால இராணா ஆகியோரின் தாக்கங்கள் காணப்படுகின்றன. [9] [10] [11]

பாகுபலி

ஜெயின் துறவியான, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோமதீஸ்வரா சிலை , சவுந்தராயாவால் இந்திரகிரி மலையில் (விந்தியகிரி மலை எனவும் அழைக்கப்படுகிறது) உருவாக்கப்பட்டது. இது, மேலைக் கங்கர்களின் சிற்பக் கலைக்கு ஒரு தனிப்பட்ட உதாரணமாக உள்ளது. நேர்த்தியான வெள்ளை கருங்கல் பயன்படுத்தி செதுக்கப்பட்ட இந்த சிலையானது, தாமரையின் மீது நிற்கிறது. இது தொடைகள் வரை எந்த ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. இச்சிலையின் முகம் மட்டும் 6.5 அடி அளவைக் கொண்டுள்ளது. மொத்தமாக இந்த சிலையானது 60 அடி உயரம் கொண்டுள்ளது. உருவத்தின் முகத்தில் காணப்படும் அமைதியான வெளிப்பாடு, அழகிய முடிச்சுகளுடன் கூடிய அதன் சுருண்ட முடி, அதன் விகிதாசார உடற்கூறியல், ஒற்றைப்பாதை அளவு மற்றும் அதன் கலைத்திறன் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் கலவையானது இடைக்கால கர்நாடகாவில் சிற்பக் கலையில் மிகப் பெரிய சாதனை என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. [12] இது உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் சிலை ஆகும். [13] சரவணபெலகுளாவிலும், சந்திரகிரி மலையிலும் கட்டப்பட்ட சவுந்தராய பசாதி சில அறிஞர்களால் வரவேற்கப்பட்டது. மற்றவர்கள் இது அவரது மகன் ஜினதேவனாவால் கட்டப்பட்டதாக வாதிடுகின்றனர். [14] இருப்பினும், 12 ஆம் நூற்றாண்டில் இந்த கோயிலின் மற்ற பகுதிகள், பிற்கால மன்னர் கங்கராஜாவால் செய்யப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்த சன்னதி சவுந்தராயால் கட்டப்பட்டது என்று பாரம்பரியம் கூறியது. இருப்பினும் மற்றொரு பார்வையாக, அசல் ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் புனிதப்படுத்தப்பட்டு சவுந்தராயாவின் நினைவாக கட்டப்பட்டது என்கிற கருத்து நிலவுகிறது. [15]

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads