சாஃபக்கிளீசு

பண்டைய கிரேக்க நடக ஆசிரியர் From Wikipedia, the free encyclopedia

சாஃபக்கிளீசு
Remove ads

சோபோகிளிஸ் (Sophocles - கிமு 496 - கிமு 406) ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் ஆவார். இன்றும் கிடைக்கின்ற ஆக்கங்களை எழுதிய பண்டைக் கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர்கள் மூவருள் இவர் இரண்டாமவர். இவருடைய முதல் நாடகம் ஏஸ்கலஸ் (Aeschylus) என்னும் பண்டைக் கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர் எழுதிய நாடகங்களுக்குப் பிற்பட்டதும், இயூரிபிடீஸ் (Euripides) என்னும் இன்னொரு பண்டைக் கிரேக்க நாடகாசிரியருடைய நாடகங்களுக்குப் முந்தியதும் ஆகும். சூடா என்னும் பத்தாம் நூற்றாண்டுக் கலைக்களஞ்சியம் ஒன்றின்படி, சோபோகிளிஸ் தனது வாழ்நாளில் 120க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியதாகத் தெரிகிறது.[1] ஆனாலும், இவற்றுள் ஏழு நாடகங்கள் மட்டுமே இன்று முழுமையாகக் கிடைக்கின்றன. இவை, அஜாக்ஸ், அன்டிகனி, டிரக்கினியப் பெண், அரசன் எடிப்பசு, எலெக்ட்ரா, பிலாக்டெட்டீஸ், கொலோனசில் எடிப்பசு ஆகியவையாகும்.[2]

விரைவான உண்மைகள் சாஃபக்கிளீசு, பிறப்பு ...
Thumb
ஒரு புலவருடைய சலவைக்கற் சிற்பம் சோபோகிளிஸ் ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஏறத்தாழ 50 ஆண்டுகளாக, அக்காலத்து ஆதென்சில் நடைபெற்றுவந்த லெனேயா, டயனீசியா போன்ற விழாக்களில் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் அதிக பரிசு பெற்ற நாடகாசிரியர் இவரேயாவார். சோபோகிளிஸ் பங்குபற்றிய சுமார் 30 நாடகப் போட்டிகளில் 24ல் இவர் வென்றிருக்கக்கூடும் என்றும் எதிலுமே இரண்டாம் பரிசுக்குக் கீழ் எடுத்தது இல்லை எனவும் சொல்லப்படுகிறது. ஏஸ்கலஸ் 14 போட்டிகளில் வென்றுள்ளார். இயூரிபிடீஸ் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றார்.[3]

Remove ads

வாழ்க்கை

சோஃபில்லசின் மகனான சோபோகிளிஸ், அட்டிகாவில் உள்ள ஹிப்பியோஸ் கொலோனசின் சிற்றூர்ப்புற தெமெயில் செல்வந்த பிரிவினராக இருந்தார். கி.மு. 490 இல் மராத்தான் போருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அங்கு பிறந்திருக்கலாம் எனப்படுகிறது.[4][5] என்றாலும் சரியான ஆண்டு தெளிவாக தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் 497/6 ஆண்டாக இருக்கலாம் எனப்படுகிறது.[4][6] இவர் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் (இவரது தந்தை போர்க் கவச உற்பத்தியாளர்), மற்றும் உயர்ந்த படிப்பாளி. கி.மு. 468 இல், சோபோகிளிஸ் தியோனிசியாவில் நடந்த விழாவில் நடந்த நாடகப் போட்டியில் ஏதெனியன் நாடக ஆசிரியரான எஸ்கிலசை தோற்கடித்து, முதல் பரிசைப் பெற்றார்.[4][7] புளூட்டாக்கின் கூற்றுப்படி, அந்த வெற்றி அசாதாரண சூழ்நிலையில் கிடைந்தது: நீதிபதிகளை சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கும் வழக்கமான வழக்கத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆர்கோன் சிமோனிடமும், மற்ற ஸ்ரடிகெசிகளிடமும் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்படி கேட்டனர். குறிப்பிடுகயில், இந்த்த் தோல்வியைத் தொடர்ந்து, எசுக்கிலசு விரைவில் சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.[8] இது சோபோகிளிசின் முதல் நாடகத் தயாரிப்பு என்று புளூட்டாக் கூறினாலும், இவரது முதல் நாடகத் தயாரிப்பு கிமு 470 இல் இருக்கலாம் என்று இப்போது கருதப்படுகிறது.[5] இந்த விழாவில் சோஃபோக்கிள்ஸ் வழங்கிய நாடகங்களில் டிரிப்டோலமஸ் ஒன்றாக இருக்கலாம். இவர் மொத்தம் நூற்றுப் பதின்மூன்று நாடகங்களை எழுதியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் ஏழு மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. சிறந்த நாடகங்களை இயற்றியதற்காக இருபது தடவை முதல் பரிசை பெற்றிருக்கிறார். முதல் பரிசை பெற்றபோது இவரின் வயது இருபத்தைந்து. கடைசிதடவை பரிசு பெற்றபோது வயது எண்பத்தைந்து ஆகும்.

கிமு 406/5 குளிர்காலத்தில் சோபோகிளிஸ் 90 அல்லது 91 வயதில் இறந்தார். இவரது வாழ்நாளில் பாரசீகப் போர்களில் கிரேக்க வெற்றி மற்றும் பெலோபொன்னேசியப் போரின் இரத்தக்களரி இரண்டையும் பார்த்தார்.[4]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads