சகரே குர்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரான் நாட்டிலுள்ள சஹர்மஹால் மற்றும் பக்தியாரி மாகாணத்தின் தலைநகரம் சாகர்-இ கொர்து ஆகும். இது மாகாணத்தின் நகரங்களிலேயே,மிகப் பெரிய நகரமாகும். மேலும் இது ஈரானின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்ஃபஹான் என்ற நகரிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி, இந்நகரத்தில் சுமார் 1,48,464 இலட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருந்தனர். இதன் பெருநகரப் பகுதிகளில் மட்டும் 3,80,312 மக்கள் வாழ்ந்து வந்தனர்.[2] சாகர்-இ கொர்து என்ற இந்நகரமானது, அதன் இயற்கை சூழல், குளிர்ந்த குளிர்காலம், நீர்வீழ்ச்சிகள், ஆறுகளுக்கு பெயர் பெற்றது ஆகும். இந்நகரம், கடல் மட்டத்திலிருந்து 2,070 km (1,290 mi) உயரத்தில் அமைந்துள்ளது. ஈரானின் மிக உயர்ந்த தலைநகரமாக சாகர்-இ கொர்து இருக்கிறது. இது நகரத்தை "ஈரானின் கூரை", என்று புகழ்ந்து உரைப்பர். தெஹ்ரான் நகரில் இருந்து, தென்மேற்கில் 521 km (324 mi) தொலைவில் சாகர்-இ கொர்து உள்ளது. இதன் வானிலை குளிர்காலத்தில் குளிராகவும், கோடையில் அதிக வெப்பம் இல்லாமலும் இருக்கும் சூழ்நிலையைக் கொண்டதாகத் திகழ்கிறது. இந்த நகரத்தில் பர்தே என்ற வான் ஓய்விட தங்கல் உள்ளது. இது 35 km (22 mi) தொலைவில் உள்ளது. இந்த தங்கல் பல இயற்கை தடாகங்களையும், வெளிப்புற நடவடிக்கைகளுக்காக சிறிய ஏரிகளையும் பெற்று சிறப்புறுகிறது.
Remove ads
தொழில்
பாரப் நிறுவனம் பல்வேறு மின்சாரக் கருவிகளைத் தாயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனமாக, இந்த மாகாணத்தில் திகழ்கிறது. இந்நிறுவனமானது, ஆவியாக்கும் குளிர்விப்பி, எரிவாயு / மண்ணெண்ணெய் / மின்சார நீர் சூடாக்கிகள், எரிவாயு விண்வெளி வெப்பி, குளிர்சாதனப் பெட்டி- உறைவிப்பான் மற்றும் இரட்டை-தொட்டி சலவை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வீட்டு பயன்பாட்டுக் கருவிகளைத் தயாரித்து, விற்பனைச் செய்யும் மிகப்பெரிய சந்தையைப் பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்திற்குள், சுமார் 1400 பேரை வேலைக்கு சேர்த்துள்ள, பார்பாப் மாகாணத்தின் மிகப்பெரிய தனியார் பிரிவாகும்.
சாகர்-இ கொர்து சிமெண்டு உற்பத்தி ஆலையானது, பரணிடப்பட்டது 2014-02-18 at the வந்தவழி இயந்திரம் ஜாக்ரோஸ் மலைத்தொடரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஆலையானது, இந்த நகரத்திலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ஃபோட்டானிக் மற்றும் ஆப்டோ எலக்ட்ரானிக் ஆராய்ச்சி குழுவானது, 2014 ஆம் ஆண்டு சாகர்-இ கொர்துவில் (ஜாக்ரோஸ்) நிறுவப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவை, இந்த ஆய்வுத் துறையில் உள்ள முக்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான, டாக்டர் ஹேமட் சாகாய் தலைமை எற்று நிர்வகித்து வருகிறார். ஃபோட்டானிக் படிக இழைகள் மற்றும் அலை வழிகாட்டிகள், ஆப்டோஃப்ளூய்டிக் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட, ஃபோட்டானிக் சில்லுகளையும், பல உள்ளிட்ட மைக்ரோக்களையும், நானோ-ஃபோட்டானிக் சாதனங்களின் வடிவமைப்புகளையும், மேலும் இவைத் தொடர்புடைய, பல்வேறு கொள்கைகள் குறித்து ஆராய்ச்சிகளையும், இவரின் குழு, கவனம் செலுத்தி ஆராய்கிறது. இந்த ஆராய்ச்சி குழு ஆதரிக்கிறது.இசுலாமிக் ஆசாத் பல்கலைக் கழகம், சாகர்-இ கொர்து என்பதன் கீழ் இக்குழு அமைகிறது. பரணிடப்பட்டது 2019-11-08 at the வந்தவழி இயந்திரம் இந்த மாகாணத்தின் ஆறு பல்கலைக் கழகங்களில் பல்வேறு குழுக்கள் உள்ளன. அவற்றில் இப்பிரிவு சிறந்து விளங்குகிறது.
Remove ads
போக்குவரவு
சாகர்-இ கொர்து பேருந்து அமைப்பில், நூற்றி ஐம்பது பேருந்துகள் உள்ளன. இப்பேருந்துகள், இந்த நகரம் முழுவதும், வெவ்வேறு பாதைகளில் இயங்குகின்றன. சாகர்-இ கொர்து விமான நிலையம், இ்ந்த நகரின் தெற்கே அமைந்துள்ள, ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும். இது தற்போது, தெகுரான், மசுகது என இரண்டு நகரங்களுக்கும் இடையே விமானங்களை இயக்குகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads