சாகைங் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாகைங் பிரதேசம் (முன்னர் சாகைங் பிரிவு) என்பது மியான்மரின் ஒரு நிர்வாகப் பிரிவாகும். இந்தப் பிரதேசம் மியான்மர் நாட்டின் வடமேற்குப் பகுதியில் அட்சரேகை 21° 30' வடக்கிலும் மற்றும் தீர்கரேகை 94 ° 97 'கிழக்கில் இடையே அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடகிழக்கு இந்தியாவின் மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகியவை வடக்கிலும், கிழக்கில் காசின் மாநிலம், ஷான் மாநிலம் மற்றும் மண்தாலே பிரதேசம் ஆகியவையும், தெற்கில் மண்தாலே பிரதேசம் மற்றும் மாகுவே மண்டலம் ஆகியவையும், ஐராவதி ஆறு கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளாகவும், மேற்கில் சின் மாநிலம் மற்றும் இந்தியாவும் எல்லைகளாக அமைந்துள்ளது.
இப்பகுதி 93,527 கிமீ2 பரப்பளவில் உள்ளது. 1996 ஆண்டில், அதன் மக்கள்தொகை 5,300,000 க்கும் மேல் கொண்டிருந்தது, 2012 ஆண்டில் அதன் மக்கள் தொகை 6,600,000 ஆக இருந்தது. 2012 ஆண்டில் நகர்ப்புற மக்கள்தொகை 1,230,000 மற்றும் கிராமப்புற மக்கள்தொகை 5,360,000 ஆகவும் இருந்தது. [2]
இதன் தலைநகரம் மோநிவா
Remove ads
வரலாறு
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads