மாகுவே மண்டலம்

மத்திய மியான்மரில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia

மாகுவே மண்டலம்
Remove ads

மாகுவே மண்டலம் (Magway Region) மத்திய மியான்மரில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். முன்னதாக இந்நிர்வாகப்பிரிவு மாகுவேக் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. மியான்மர் நாட்டின் ஏழு கோட்டப் பிரிவுகளில், 17,306 சதுர மைல்கள் அல்லது 44,820 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடன் மாகுவே இரண்டாவது பெரிய கோட்டமாக உள்ளது.

விரைவான உண்மைகள் மாகுவே மண்டலம்Magway Region မကွေးတိုင်းဒေသကြီး, Country ...
Remove ads

புவியியல்

சுமார் 18 ° 50 '22 ° 47' கிழக்கு தீர்க்கரேகைக்கும் 93 ° 47 '95 ° 55' வடக்கு அட்சரேகைக்கும் இடையிலான அடையாள ஆள்கூறுகளில் மாகுவே பகுதி அமைந்துள்ளது. வடக்கில் சகாயிங் மண்டலமும், கிழக்கில் மாண்டலே மண்டலமும், தெற்கில் போகோ மண்டலமும், மேற்கில் இராக்கின் மற்றும் சின் மாநிலங்களும் மாகுவே மண்டலத்திற்கு எல்லைகளாக இருக்கின்றன.

40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயர் பாலூட்டிகளான மனிதக் குரங்கினத்தின் தொல்பொருள் புதைப்படிவுகள் மாகுவே மண்டலத்தைச் சேர்ந்த பாண்டவுங் மற்றும் பொன்னியா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்புதைப் படிவுகளை ஆதாரமாக முன்வைத்து, உலகத்தில் மனிதகுலம் தோன்றிய பகுதி மியான்மரே என்று அந்நாட்டு அரசு கோரி வருகிறது., மாகுவே மண்டலத்தில் உள்ள தவுங்டிவிங்யி நகரியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய பையூ, பெக்தானோ-மியோ நகரத்தின் தொல்லியல் தளங்கள் காணப்படுகின்றன. மாகுவே மண்டலத்தின் வரலாறு பர்மாவின் மற்ற நிர்வாகப் பிரிவுகளின் அம்சங்களைப் பிரதிபலிக்கிறது.

Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

மாகுவே, மின்பு, தாயெட், பகோக்கு, கங்காவ் மாவட்டங்களும், 25 நகரியங்களும், 1696 கிராம நிலப்பகுப்புப் பிரிவுகளும் சேர்ந்து மாகுவே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மண்டலத்தின் தலைநகரம் மாகுவே ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை 1994 இல் 300000 என மதிப்பிடப்பட்டது. பகோக்கு, அவுங்லான், ஏனாங்யவுங், மின்பு முதலியன பிற முக்கிய நகரங்களாகும்.

மக்கள் தொகையியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

மாகுவே மண்டலத்தின் மக்கள் தொகை 2014 ஆம் ஆண்டில் 39,12,711 நபர்களாக இருந்தது. இம்மக்கள் தொகையில் 95 சதவீதத்தினர் பாமர் இனக்குழுவைச் சேர்ந்த மக்களாவர். சின், இராக்கின், காரென், சான் இனமக்கள் சிறுபான்மையினராகவும் ஆங்கிலோ – பர்மிய மக்கள் மிகச் சிறுபான்மையினராகவும் இம்மண்டலத்தில் வாழ்கின்றனர். காலனித்துவக் காலத்தில் பர்மாவின் இப்பகுதியில் ஏராளமான ஆங்கிலோ பர்மிய மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் மேற்கத்திய எண்ணெய்த் தொழிலாளர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய பர்மியப் பங்குதாரர்களும் ஆவர். மக்கள் தொகையில் தோராயமாக 98 சதவீதத்தினர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாகும்.

போக்குவரத்து

மாகுவே மண்டலத்தில் ஐராவதி ஆறு முக்கியமான போக்குவரத்து அமைப்பாகச் செயல்படுகிறது. ஆற்றில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கையிலும் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பொருள்களில் அளவிலும் இந்நதி பெரும்பங்கு வகிக்கிறது. இம்மண்டலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் எல்லாம் ஐராவதி நதியின் துறைமுகங்கள் உள்ளன.

மாகுவே, பகோக்கு, ஏனாங்யவுங், மின்பு, சவுக், அல்லன்மியோ, தாயெட்மியோ என்பன அவற்றில் சிலவாகும். ஐராவதி நதி பாயாத நகரங்களில் சாலைப் போக்குவரத்து வகை மட்டுமே முக்கிய போக்குவரத்து அமைப்பாகும். இம்மண்டலம் ஐராவதி நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. நதியின் மேற்குப் பகுதியில் சாலை அமைப்பு சரியாக வளர்ச்சியடையவில்லை. நகரங்கள் இருவழிப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இரங்கூன் மாண்டலே நகரங்களுக்கு எல்லா நகரங்களிலி இருந்தும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பியாய் முதல் நியவுங் மற்றும் மைங்யான் இரயில்பாதை மாகுவேயின் கிழக்குப் பகுதி வழியாக இயங்குகிறது. தலைநகர் நய்பிய்டா, ரங்கூன், மாண்டலே நகரங்களை இப்பாதை இணைத்துச் செல்கிறது. இப்பாதை தவிர மேலும் இரண்டு வழித்தடங்கள் பகோக்கு நகரத்திலுள்ள ஐராவதி துறைமுகத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்கின்றன. சகாயிங் மண்டலத்திலுள்ள சவுங்-யு வை நோக்கி ஒரு பாதையும், கியாவ்,[2] மையாங் நகரங்களைக் கடந்து மேற்கு பர்மாவிலுள்ள மைத்தா ஆற்றுப் பள்ளத்தாக்கை நோக்கி ஒரு பாதையும் செல்கின்றன.

மாகுவே நகரத்திற்காக ஒரு சிறிய வானூர்தி நிலையம் இருக்கிறது. 113 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நியவுங்யு நகரத்தில் உள்ள பகான் வானூர்தி நிலையம் வழியாக விமானம் இங்கு வருவதுண்டு. வணிக வானூர்தி நிலையங்கள் கங்காவ், கியாக்டு[3], பொகோக்கு மற்றும் பவுக்[2] நகரங்களில் இயங்குகின்றன.

Remove ads

பொருளாதாரம்

மாகுவே மண்டலத்தில் பெட்ரோலியம் முக்கியமான உற்பத்திப் பொருளாக உள்ளது. இதிலிருந்து எண்னெய் மற்றும் இயற்கை எரிவாயு முதலியன தயாரிக்கப்படுகின்றன. மாண், ஏனாங்யவுங், சவுக், கியவுக்-கிவெட், இலெட்பாண்டோ, அயாதாவ் எண்ணெய் வயல் முதலியன இங்குள்ள சில எண்னெய் வயல்களாகும்[4]

மே 2002-இல் மியான்மார் பகுதியில் 10 மெகாவாட் அணு உலை மற்றும் இரண்டு ஆய்வகங்கள் கட்டுவதற்கு உதவுவதாக உருசியா ஒப்புக் கொண்டது[5]. சிமெண்ட், பருத்தி நெசவு, மற்றும் புகையிலை, இரும்பு மற்றும் வெண்கல தொழிற்சாலைகளும் இதில் அடங்கும். பெட்ரோல் மற்றும் சமையல் எண்ணெய் அதிகமாக இங்கு உற்பத்தி செய்யப்படுவதால் "மியான்மரின் எண்ணெய் குடம்” என்று மாகுவே பகுதி அழைக்கப்படுகின்றது.

விவசாயத்தில் எள்ளும் நிலக்கடலையும் இப்பகுதியின் முக்கியப் பயிர்களாகும். அரிசி, தினை, சோளம், சூரியகாந்தி, அவரை, பருப்பு வகைகள், புகையிலை, கள்ளு, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவையும் இங்கு விளைகின்றன. சுற்றுலாத் தொழில் இங்கு அறவே நடைபெறுவதில்லை.

Remove ads

கல்வி

மாகுவே மண்டலத்தில் 3859 பள்ளிக்கூடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்[6] தெரிவிக்கின்றன. இவற்றில் 70 மட்டுமே உயர்நிலைப் பள்ளிகளாகும். 10 சதவீத தொடக்கப்பள்ளி குழந்தைகளே இங்கு உயர்நிலைப் பள்ளியை எட்டுகின்றனர்.

மேலதிகத் தகவல்கள் AY 2002-2003, தொடக்கம் ...

மாகுவே மற்றும் பகோக்குவில் மட்டும் 12 கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இடம்பெற்றுள்ளன. மாகுவே மருத்துவப் பல்கலைக்கழகம் நாட்டில் மிகமுக்கியமான ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது.

Remove ads

உடல் நலம்

மியான்மரில் உடல்நலம் காப்பதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறைவாகும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 0.5% முதல் 3% மட்டுமே சுகாதாரத்திற்காக செலவழிக்கப்படுகிறது[7][8] . சுகாதாரத்தின் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் மியான்மர் மிகவும் கீழ்நிலையில் உள்ளது. பொதுவாக மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட மாகுவே மண்டலத்தில் இரங்கூன் மண்டலத்தின் மருத்துவமனைகளைவிட குறைவான படுக்கை வசதிகளே உள்ளன[9]

மேலதிகத் தகவல்கள் 2002–2003, # மருத்துவமனைகள் ...

.


Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads