சாக்கோட்டை - தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாக்கோட்டை (Sakkottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். புகழ்பெற்ற அமிர்தகடேசுவரர் ஆலயம் இக்கிராமத்தில் உள்ளது. பிரபல இந்திய வரலாற்றாசிரியர் கிருட்டிணசாமி அய்யங்காரும், மணிமேகலை சுகுமார் முதலியாரும் இந்த மண்ணின் மைந்தர்களாவர். பண்டைய காலத்தில் இக்கிராமம் சவ்வுக்கோட்டை என அறியப்பட்டது.

Remove ads

மக்கள் தொகை

2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சாக்கோட்டை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2889 ஆகும்[3]. இதில் ஆண்கள் எண்ணிக்கையில் 1437 பேரும் பெண்கள் எண்ணிக்கையில் 1452 பேரும் அடங்குவர். மேலும் இத்தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 301 ஆகும். இக்கிராமத்தின் ஆண் பெண் பாலின விகிதம் 1010 ஆக இருந்தது[3]. கிராம மக்களின் மொத்த எழுத்தறிவு சதவீதம் 70.22 ஆகும். இதில்ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 79.37 ஆகவும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 64.66 ஆகவும் இருந்தது. கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 790 பேரும் மலை வாழ்மக்கள் எண்ணிக்கை 4 பேரும் என்ற அளவில் இருந்தனர். [4]

Remove ads

முக்கிய நபர்

இந்திய வரலாற்று ஆசிரியரும் திராவிட அறிஞருமாகக் கருதப்படும் கிருட்டிணசாமி அய்யங்கார் சாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads