சாஞ்சோர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாஞ்சோர் (Sanchore), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள ஜலோர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 மார்ச் 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட சாஞ்சோர் மாவட்டத்தின்[2] நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது ஜெய்ப்பூருக்கு தென்மேற்கே 565 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் இராஜஸ்தான்-குஜராத் எல்லைப்புறத்தில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 23 வார்டுகளும், 5657 வீடுகளும் கொண்ட சாஞ்சோர் நகராட்சியின் மக்கள் தொகை 32,875 ஆகும். அதில் ஆண்கள் 17,115 மற்றும் பெண்கள் 15,760 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.52 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24.51 % மற்றும் 2.63 % ஆக உள்ளனர். இந்துக்கள் 86.25%, சமணர்கள் 6.45%, இசுலாமியர்கள் 7.15% மற்றும் பிறர் 0.15% ஆக உள்ளனர். [3]
Remove ads
போக்குவரத்து
இராஜஸ்தானின் ஜெய்சல்மேர் மற்றும் குஜராத்தின் மெக்சனா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 68 சாஞ்சோர் வழியாகச் செல்கிறது.[4]
நீர் வளம்
நர்மதை கால்வாய்[5]சாஞ்சோர் மாவட்டம் மற்றும் ஜலோர் மாவட்டத்தின் 124 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads