நர்மதை கால்வாய்

From Wikipedia, the free encyclopedia

நர்மதை கால்வாய்
Remove ads

நர்மதை கால்வாய் (Narmada Canal), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை நீரை குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலப் பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் கொண்டு செல்வது ஆகும். குஜராத் மாநிலத்தில் இதன் முதன்மைக் கால்வாய் நீளம் 532 கிலோமீட்டர்கள் (331 mi) (458 கிலோமீட்டர்கள் (285 mi) மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் நீளம் 74 கிலோமீட்டர்கள் (46 mi) கொண்டது. இக்கால்வாய் 24 ஏப்ரல் 2008 அன்று திறக்கப்பட்டது..[2] முதன்மைக் கால்வாயின் தலைப்பகுதியிலிருந்து வினாடிக்கு 40,000 கன அடி நீரும்; வால் பகுதியில் 2,600 கன அடி நீரும் வெளியேறுகிறது.

விரைவான உண்மைகள் நர்மதை முதன்மை கால்வாய் சர்தார் சரோவர் கால்வாய், அமைவு ...

இதன் முதன்மைக் கால்வாயிலிருந்து 42 கிளைக் கால்வாய்கள் மூலம் 2,129,000 எக்டேர்கள் (5,260,000 ஏக்கர்கள்) பரப்பளவு (குஜராத்தில்18 இலட்சம் ஹெக்டேர் மற்றும் இராஜஸ்தானில் 2.5 இலட்சம் ஹெக்டேர்) வேளாண் நிலங்களுக்கு நீர் பாசானம் வழங்குகிறது.

Remove ads

குஜராத்தில் நீர் பாசனம்

குஜராத் மாநிலத்தில் நர்மதை கால்வாய் 38 கிளைக் கால்வாய்கள் கொண்டது.

சௌராஷ்டிரா கிளைக் கால்வாய்

சௌராஷ்டிரா பகுதிகளில் செல்லும் நர்மதை கிளைக் கால்வாய் 104.46 கிலோ மீட்டர் நீளமும்; வினாடிக்கு 15,002 cubic feet per second (424.8 m3/s) நீர் பாசனம் வழங்குகிறது. மேலும் சௌராஷ்டிராப் பகுதியில் உள்ள இக்கிளைக் கால்வாய் மூலம் 3 சிறிய புனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளது. இறுதியாக கிளை கால்வாய் மூலம் செல்லும் நீர் போகாவா ஏரியை அடைகிறது..[3]

Remove ads

இராஜஸ்தானில் நீர் பாசனம்

குஜராத்தில் 458 கிலோ மீட்டர் பயணித்த நர்மதை கால்வாய் கட்ச் வழியாக 74 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் சாஞ்சோர் வருவாய் வட்டம் வரை செல்கிறது.[4]இராஜஸ்தான் மாநிலத்தில் 1,477 சதுர கிலோமீட்டர்கள் (570 sq mi) பரப்பளவில் செல்லும் இக்கால்வாய் மூலம் சாஞ்சோர் மாவட்டத்தின் 124 கிராமங்களுக்கு குடிநீர் வசதி பெறுகிறது.[5] In total, it was designed to irrigate 246,000 எக்டேர்கள் (610,000 ஏக்கர்கள்) in 233 villages in Jalore and Barmer and provide drinking water to 1,336 villages.[4]

Remove ads

மேலும் படிக்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads