சாத்தியகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாத்தியகி அல்லது சாத்யகி (Satyaki) மகாபாரதத்தின் கதை மாந்தர்களுள் ஒருவன். யுயுதனன் என்றும் அழைக்கப்படும் இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு வீரனாவான்.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்தியகி பாண்டவர்களை ஆதரித்தான். கண்ணன் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்தியகியும் உடன் சென்றிருந்தான்.
குருச்சேத்திரப் போரில் கலந்துகொண்ட யாதவ குல வீரர்களுள் சாத்தியகியும், கிருதவர்மனும் முக்கியமானவர்கள். எனினும், இருவரும் எதிர்த் தரப்புகளில் சேர்ந்து போரிட்டனர். சாத்தியகி பண்டவர்களுடன் சேர்ந்து போரிட, கிருதவர்மன் கௌரவர்கள் பக்கம் நின்றான்.
சாத்தியகி சினி என்பவரின் பேரனும்,சாத்யாகரின் மகனும் ஆவார்,கிருஷ்ணன் சாத்தியாகிக்கு மாமன் முறையாகும்,இவர் யாதவ குலத்தில் விருஷ்ணி பிரிவை சேர்ந்தவர், கிருஷ்ணரும், பலராமனும் விருஷ்ணி பிரிவையை சேர்ந்தவர்களே. கிருஷ்ணனின் உற்ற நண்பரும் ஆவார்.
Remove ads
கல்வி
சாத்தியகி துரோணரிடமும்,அர்ஜுனனிடமும் வில் வித்தையை கற்றவர்.குருச்ஷேத்திர போரில் துரோணரின் வில் நாணை நூற்றியோரு முறை தொடர்ந்து அறுத்து,வெல்லமுடியாத சாத்தியகி என்று துரோணரால் புகழப்பட்டவர். பாண்டவர் தரப்பில் இருந்த மிக சிறந்த வில்லாளிகளில் இவரும் ஒருவர்
குல பகை
சாத்தியகியின் தாத்தாவான சினி, வசுதேவருக்காக(கண்ணனின் தந்தை) சுயம்வரத்தில் பங்கேற்று தேவகியை வெல்கிறார்,இதை ஏற்காத சோமதத்தர் என்ற மன்னர் சினியை எதிர்க்க,சோமதத்தரை தேர்க்காலில்கட்டி அவமதிக்கிறார் சினி .இதற்கு பழிவாங்க சோமதத்தர் தன் மகன் பூரிஸ்சிரவஸ் முலம் சினியின் மகனான சாத்யாகரை அதே முறையில் அவமதிக்கிறார்,இதற்கு பழிமுடிக்க தக்க நேரம் பார்த்து காத்திருக்கிரார் சாத்தியகி,இப்படி இரு குடும்பத்திற்கிடையே குலபகை நெடுங்காலமாய் நிலவுகிறது.
Remove ads
குருச்சேத்திரப் போர்
பாண்டவர்களின் வனவாசத்தின் போது துவாரகையில் வாழ்ந்த அபிமன்யுவிற்கு போர் பயிற்சி அளித்தவருள் சாத்தியகியும் ஒருவர்.ஒரு அக்குரோணி சேனையுடன் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக போரிட்டார். பாண்டவ அணியின் எழு படைத்தளபதிகளுள் சாத்தியகியும் ஒருவர். ஐந்தாம் நாள் போரில் சாத்தியகியின் பத்து பிள்ளைகளை கொன்ற பூரிசிரவசைக் சாத்தியகி கொல்கிறார்.[1]
பதினான்காம் நாள் போர்
ஜயத்ரதனை கொல்ல அர்ஜுனன் தனியே செல்கிறார்,வெகு நேரமாய் அர்ஜுனனின் சங்கோளி கேட்காததால் பிமனை அர்ஜுனுக்கு உதவ அனுப்புகிறார் தருமர்,வீமன்,சாத்தியகியை தருமருக்கு துணையாக இருக்க சொல்லி அர்ஜுனனை தேடிக்கொண்டு செல்கிறார்,சற்று நேரத்தில் சாத்தியகியையும் அர்ஜுனனுக்கு உதவும்படி கட்டாயப்படுத்தி அனுப்புகிறார் தருமன். முன்னேறும் சாத்தியகியை தடுக்க துரோணர் தாக்குகிறார்,ஆனால் துரோணரின் தாக்குதலை சாத்தியகி முறியடிக்கிறார்,தனக்கு தெரிந்த ஆயுதமேல்லாம் அர்ஜுனனும் அறிவான்,அவன் அறிந்த அனைத்தும் அவனின் மாணவனான நீயும் அறிந்திருக்கிறாய் அதனால் உன்னை என்னால் வெல்லமுடியாது என்று சாத்தியகியின் வழியிலிருந்து விலகுகிறார் துரோணர். அர்ஜுனனும்,வீமனும் இணைந்து கௌரவ படைகளை சிதறடிக்கின்றனர்,அவர்களுடன் சாத்தியகியும் இணைந்தால் கௌரவ படை அனைத்தும் அழிவது உறுதி என்று துரியோதணன் சாத்தியகியை தடுத்து நிறுத்த சாத்தியகியின் ஜென்ம விரோதியான பூரிஸ்சிரவசை அனுப்புகிறார்.வாள் சண்டையில் சிறந்த புரிஸ்சிரவஸ் சாத்தியகியை வாற்சண்டைக்கு அழைக்கிறார்,தன் குல பகைமுடிக்க தக்க தருணம் எதிர்பார்த்த சாத்தியகியும் வாள் சண்டைக்கு வருகிறார். வில்லாளியான சாத்தியகியை வெல்கிறார் வாள் சண்டையில் நிபுணரான பூரிஸ்சிரவஸ்,விழுந்து கிடக்கும் சாத்தியகியை கொல்ல வாளை உயர்த்துகிறார் பூரிஸ்சிரவஸ்.அப்பொழுது அங்கே வரும் கிருஷ்ணனும் அர்ஜுன்னும்,தன் நண்பன் சாத்தியகியை காப்பாற்றும்படி கூறுகிறார் கிருஷ்ணன்,இருவர் போர்புரியும்போது முன்றாவது ஒருவர் நுழையக்கூடாது என்று அர்ஜுனன் கூறுகிறார்,உன்னை நம்பி வந்தவனை நீ தான் காக்கவேண்டும் என்று அர்ஜுனனை கேட்டுக்கொல்கிறார் கண்ணன்.அர்ஜுனனும் பின்னாலினுந்து பூரிஸ்சிரசின் வாளேந்திய கையை அம்பினால் வெட்டுகிறார்.சாத்தியகி உயிர் தப்புகிறார். அர்ஜுனனை நோக்கி புரிஸ்சிரவஸ் “பின்னாலிருந்து தாக்கும் இந்த கலையை எங்கிருந்து கற்றாய் அர்ஜுனா ,உன் பாட்டனார் விடுமரிடமா?உன் ஆசான்கள் துரோணரிடமா?கிருபரிடமா?இந்த ஆயர் மகன் கண்ணனிடமா?இது அறமாகுமா?என்று கேட்கிறார்.”நேற்று என் மகன் அபிமன்யுவை எட்டு மகாரதர்கள் சேர்ந்து கொன்றீர்களே அது மட்டும் அறாமா?”என்று அர்ஜுனன் கேட்க,பூரிஸ்சிரவஸ் மௌனமாக தலைகுனிகின்றார்.”நாம் குறை கூறவேண்டுமானால் நம் க்ஷத்திர தர்மத்தை தான் குறை சொல்ல வேண்டும் என்று அர்ஜுனன் கூற,மனம் வெறுக்கும் பூரிஸ்சிரவஸ் தன் ஆயுதங்களை தரையில் பரப்பி ஊழ்கத்தில்(தியானம்)அமர்கிறார் ,தன் குல பகை முடிக்க தியானத்தில் இருந்த பூரிஸ்சிரவசின் தலையை தன் வாளால் கொய்தெறிகிறார் சாத்தியகி.அதை பார்த்த அனைத்து வீரர்களும் சாத்தியகியையும்,அர்ஜுனனையும் தூற்றுகின்றனர். பூரிஸ்சிரவசை கொன்ற மகிழ்ச்சியில் கௌரவ படை நிலைகுலைய வைக்கிறார் சாத்தியகி,அவரை எதிர்த்து வந்த கர்ணனையும் வென்று முன்னேறுகிறார்[2][3]
Remove ads
இரவு யுத்தம்
14ம் நாள் போர் பாண்டவர்களுக்கு சாதகமாக முடிகிறது,இதனால் இரவில் தாக்குதல் செய்கிறது கௌரவ படை,தன் மகன் பூரஸ்சிரவஸ் மரணத்திற்கு பழிதீர்க்க சாத்தியகியை தாக்குகிறார் சோமதத்தர் ,சோமதத்தரை கொன்று தன் குல பகையை தீர்த்துக்கொள்கிறார் சாத்தியகி, 18 நாள் போர் முடிவில் உயிருடன் எஞ்சிய வீரர்களில் சாத்தியாகியும் ஒருவர்..
இறப்பு
குருச்ஷேத்திர போரின் முப்பதியாறாவது ஆண்டு நிறைவு விழா யாதவர்களால் பிரபாச நகர் கடற்கரையில் நடைபெறுகிறது,மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்,ஒரு கட்டத்தில் போரினை பற்றி பேச்சு எழுகிறது,விருஷ்ணி குல சாத்தியகி தலைமையிலான ஒரு பிரிவும் ,அந்தக குலத்தோனும் குருச்ஷேத்திர போரில் கௌரவர்களுக்காக போரிட்ட யாதவரான கிருதவர்மன் தலைமையிலான ஒரு அணியும் பிரிந்து பேசுகின்றனர்,பேச்சு வாக்குவாதமாக மாறுகிறது,”தூங்கிக்கொண்டிருந்த வீரர்களை கொன்ற வீரர்கள் தானே நீங்கள் என்று சாத்தியகியின் தரப்பு,கிருதவர்மன் தரப்பை கேளிசெய்ய.கோபம் கொண்ட கிருதவர்மன்”சாத்தியகி நீ மட்டும் வீரனா,ஊழ்கத்தில் இருந்த பூரிஸ்சிரவசை கொன்ற கோழை தானே நீ”என்று மது மயக்கத்தில் கூற,சினம் கொண்ட சாத்தியகி “இனியொரு சொல் சொல்லாதே”என்று தன் வாளால் கிருதவர்மனின் தலையை வெட்டிவிடுகிறார்,இதனால் கொதிபடையும் கிருதவர்மனின் தரப்பு சத்தியாகி மற்றும் அவரின் தரப்பைதாக்குகிறது,இந்த தாக்குதலில் சாத்தியகி கொல்லபடுகிறார்.யாதவர் குலம் தங்களுக்குளே தாக்கிக்கொண்டு மொத்த யாதவ குலமே அழிகிறது[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads