சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தலிங்க இராமசாமி அடிகளார் என்பவர் கோயம்புத்தூர் மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் கீழை சிதம்பரம் என்று அழைக்கப்படும் 400 வருடப் பழமையான திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழிப் பேரூராதீனத்தின் குருமுதல்வராக இருக்கிறார். மற்றும் உதகை அருள்மிகு ஆலமர்செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் திகழ்ந்து வருகிறார். கொங்கு நாட்டின் சமய சமுதாய வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இவர் பெருந் தொண்டாற்றி வருகின்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக (1972 - 1978) இவர் பணியாற்றினார். அப்போது தமிழ் மொழி வாயிலாகவே அனைத்து அலுவல்களும் நிகழவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டு தமிழ்க் கல்லூரிகளில் இளங்கலை இலக்கியப் பாடத்தைக் கொண்டுவந்து தமிழ்க் கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகளுக்கு இணையான நிலைக்கு உயர்த்தினார்[1]. 90 வயதினை எட்ட இருக்கும் இவர், இவ்வயதிலும் தமிழ்ப்பயிற்றுமொழி, தமிழ்வழிபாட்டுமொழி ஆகியவற்றிற்காகக் குரல் கொடுத்து வருகிறார்.
Remove ads
மேற்கோள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads