சாந்தினி சவுக்

இந்தியாவின் வடக்கு டில்லிக்கு அருகாமையில் உள்ள வணிக வளாகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாந்தினி சவுக் (நிலவு ஒளி சதுக்கம்) (The Chandni Chowk) (Moonlight Square), இந்தியாவின் தலைநகரமான் தில்லிப் பெருநகரத்தின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே அமைந்த பெரிய வணிக மையமாகும்.[1][2] இப்பகுதியில் செங்கோட்டை ஜும்மா பள்ளிவாசல், சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் மற்றும் திகம்பர சமணக் கோயில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் சாந்தினி சௌக் چاندنی چوکਚਾਂਦਨੀ ਚੌਕचाँदनी चौक, நாடு ...
Remove ads

வரலாறு

Thumb
சாந்தினி சவுக் பகுதியில் இறுதி முகலாய மன்னர் பகதூர் ஷாவின் ஊர்வலம், 1843
Thumb
சுனேரி மசூதி, சாந்தினிசவுக், 1850
Thumb
1860ல் சாந்தினி சவுக் வணிக மையம்
Thumb
தில்லி அரசவை மண்டபத்திற்கு எழுந்தருள, ஊர்வலமாக வரும் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் இராணி அலெக்சாண்டிரா, ஆண்டு 1903

முகலாயப் பேரரசர் ஷாஜகான், யமுனை ஆற்றின் கரையில் பழைய தில்லியில் பேரரசின் தலைநகரை நிறுவ செங்கோட்டை மற்றும் ஜும்மா பள்ளிவாசலைக் கட்டினார். புதிய நகரத்திற்கு ஷாஜகானாபாத் எனப் பெயரிட்டார்.

ஷாஜகான் தனது மகள் இளவரசி ஜெகன்னரா பேகத்தின் திட்டப்படி, செங்கோட்டை எதிரே உள்ள பகுதியில் நிலவு ஒளி சதுக்கம் எனப் பொருள் படி, சாந்தினி சவுக் எனும் பெரிய வணிக வளாகத்தை கிபி 1650ல் நிறுவினார். சாந்தினி சவுக் வணிக வளாகம் 1520 கெஜம் நீளம், 40 கெஜம் அகலத்துடன் 1,560 கடைகளுடன் அமைக்கப்பட்டது.[3]

இந்திய வணிக மையங்களில் சாந்தினி சவுக் வணிக வளாகம் பழமையானதும், புகழ் பெற்றதாகும்.[4] முகலாய மன்னர்கள் சாந்தினி சவுக் வழியாக நகர் ஊர்வலம் செல்வது வழக்கமானதாகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், சாந்தினி சவுக் போன்று, தில்லி நகரச் சதுக்கம் பகுதியை 1863ல் நிறுவினர்.

சாந்தினி சவுக் பகுதி, மதில் சுவர்களால் சூழப்பட்ட பழைய தில்லியின் நடுவில், செங்கோட்டையின் லாகூரி கேட் பகுதியிலிருந்து துவங்கி, பதேபுரி மசூதி வரை நீள்கிறது.[5]

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads