திகம்பர சமணக் கோயில்

இந்தியாவில் உள்ள சமணக்கோயில் From Wikipedia, the free encyclopedia

திகம்பர சமணக் கோயில்map
Remove ads

திகம்பர சமணக் கோயில் (Shri Digambar Jain Lal Mandir) (Hindi: श्री दिगंबर जैन लाल मंदिर Śrī Digambar Jain Lāl Mandir), சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரமான பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில், செங்கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் திகம்பர சமணக் கோயில், சாந்தினி சௌக், அடிப்படைத் தகவல்கள் ...

இக்கோயில் பின்புறம் பறவைகளுக்கான மருத்துவ மனை செயல்படுகிறது. [1][2]

இக்கோயில் செந்நிற மணற்கல்லால் 1658ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]

Remove ads

வரலாறு

முகாலயப் பேரரசர் சாசகான் ஆட்சியின் போது (1628–1658) செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதிகளுடன் பழைய தில்லி நகரம் நிறுவப்பட்ட போது, சமண சமய வணிகர்களை அழைத்து[4]தில்லி நகரப் பகுதிகளில் வணிகம் செய்ய கேட்டுக் கொண்டார். சமணர்கள் இப்பகுதியில் சிறு கோயில் கட்டி, பார்சுவநாருக்கு அர்ப்பணித்தனர்.

1800 - 1807ல் பிரித்தானிய இந்தியா அரசில் அதிகாரியாக இருந்த இராஜா ஹர்சுக் இராய் என்பவர், பழைய கோயிலை சீரமைத்து, கோபுரங்களுடன் புதிய கோயிலை நிறுவினார்.

இச்சமணர் கோயிலுக்கு அருகில் உள்ள கௌரி சங்கர் கோயிலை, மராத்தியப் பேரரசின் தில்லி ஆளுநராக இருந்த சிந்தியா குல அப்பா கங்காதரர் என்பவர் 1761ல் கட்டினார்.

Remove ads

கோயில் வளாகம்

Thumb
கோயில் முன் மகாஸ்தம்பம்

மூலவர் பார்சுவநாதருடன் மகாவீரர், ரிசபநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் சன்னதிகள் உள்ளது. இக்கோயிலின் பின்புறத்தில் பறவைகளுக்கான மருத்துவ மனை உள்ளது. [5]

Thumb
கோயிலின் பின்புறத்தில் பறவைகள் மருத்துவமனை

இக்கோயில் வளாகத்தில் 1957ல் நிறுவப்பட்ட பறவைகள் மருத்துவ மனையில் ஆண்டிற்கு 15,000 பறவைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

இதனையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads