சாந்தி கிருஷ்ணா

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாந்தி கிருஷ்ணா (Shanthi Krishna), மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பரதநாட்டியக் கலைஞரும் ஆவார். 1980,1990களில் மலையாளத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

விரைவான உண்மைகள் சாந்தி கிருஷ்ணா, பிறப்பு ...

இவர் நடித்த முதல் படம் 1976ல் வெளியான ஹோமகுண்டம். இருந்தபோதும், 1981ல் வெளியான நித்ர என்ற திரைப்படத்தில் நடித்தே பிரபலமானார்.

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

1964 ஜனவரி இரண்டாம் நாளில் மும்பை மாநகரில், பாலக்காட்டைப் பூர்விகமாகக் கொண்ட கிருஷ்ணன் ஐயர், சாரதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பள்ளிக்கல்வியையும் கல்லூரிப்படிப்பையும் மும்பையில் தொடர்ந்தார். ஸ்ரீநாத் என்ற மலையாள நாடக நடிகரை 1984ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்[1] முதல் திருமணத்திற்குப் பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். 1995ஆம் ஆண்டில் இவரை விவாகரத்து செய்தார். பின்னர், 1998ஆம் ஆண்டில், கொல்லத்தைச் சேர்ந்த சதாசிவன் பஜோர் என்ற தொழிலதிபரை மணந்துகொண்டார். இவர் கணவர் ராஜீவ் காந்தி குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்ஸ் என்ற குழுமத்தின் இயக்குநர் ஆவார்.[2] பின்னர், நயம் வியக்தமாக்குன்னு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிப்பைத் தொடர்ந்தார்.[3]. அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க், அல்பனி போன்ற இடங்களில் வசித்து வந்த இவர் தற்போது தன் கணவருடனும் இரு மக்களுடனும் பெங்களூரில் வசித்துவருகிறார். சுரேஸ் கிருஷ்ணா என்ற திரைப்பட இயக்குநர் இவரது சகோதரர் ஆவார்.

Remove ads

திரைவாழ்க்கை

1981ஆம் ஆண்டில் பரதன் இயக்கிய நித்ர என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து புகழ்பெறத் தொடங்கினார். அதே ஆண்டில், தமிழில் பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.[4] பின்னர், ஈணம், விச, மங்களம் நேருன்னு, இது ஞங்ஙளுடெ கத, கிலுகிலுக்கம், சாகரம் சாந்தம், ஹிமவாஹினி, சில்லு, சவிதம், கவுரவர், நயம் வியக்தமாக்குன்னு, பின்காமி, விஷ்ணுலோகம் என்னும் நன்மகள், பக்‌ஷே ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.[5]

இவர் கேரள அரசின் திரைத்துறை விருதைப் பெற்றுள்ளார். கேரள அரசின் திரைத்துறை விருதை வழங்கும் நடுவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.[6]. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் விருதுகள் பெற்றுள்ளார்.

2017ஆம் ஆண்டில் ஞண்டுகளுடெ நாட்டில் ஒரு இடவேள என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொலைக்காட்சித் தொடர்கள்

  • சாபல்யம் (தூர்தர்ஷன்)
  • ஸ்கூட்டர் (தூர்தர்ஷன்)
  • சீமந்தம் (தூர்தர்ஷன்)
  • குதிரகள் (தூர்தர்ஷன்
  • மலையாளி வீட்டம்மா (பிளவர்ஸ் டிவி)
  • காமெடி ஸ்டார்ஸ் சீசன் 2

திரைப்படங்கள்

  • இவர் நடித்த திரைப்படங்களில் பெரும்பான்மையானவை மலையாள மொழியில் வெளியானவை. மற்ற மொழிப் படங்களாயின், குறிப்பில் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

விருதுகள்

கேரள அரசின் திரைத்துறை விருதுகள்
  • 1992 - இரண்டாவது சிறந்த நடிகை - சவிதம்
  • 1994 - சிறந்த நடிகை - சகோரம்
பிற விருதுகள்
  • 2017 - ஏசியாவிசன் குணச்சித்திரக் கதாப்பாத்திர விருது - ஞண்டுகளுடெ நாட்டில் ஒரு இடவேள
  • 2018 - குணச்சித்திர நடிகைக்கான வனிதா திரை விருது - ஞண்டுகளுடெ நாடில் ஒரு இடவேள
  • 2018 - குணச்சித்திர நடிகைக்கான பிளவர்ஸ் இந்தியத் திரை விருது - ஞண்டுகளுடெ நாட்டில் ஒரு இடவேள

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads