சாந்தி ரங்கநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாந்தி ரங்கநாதன் என்பவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1980-இல் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னையில் தொடங்கியவர் ஆவார்.
Remove ads
சமூக கல்வி மையத்தில் (School of Social work) முதுகலைப் பட்டம் பெற்றவர். குடிப்பழக்கச் சிகிச்சைத் திறன்குறித்து முனைவர் பட்ட ஆய்வு முடித்துள்ளார். இளம் வயதிலேயே கணவனை இழந்த இவர், கணவரை இழந்தவுடன் அமெரிக்கா சென்று குடிப்பழக்க மீட்பு சிகிச்சைகுறித்த பயிற்சி பெற்றுவந்தார்.
பயிற்சி முடித்து வந்தபின் சென்னை இந்திரா நகரில் டி. டி. ரங்கநாதன் போதை மீட்பு மருத்துவ சிகிச்சை மையத்தைத் தொடங்கினார். கிராமங்களில் பெரும்பாலானோர் குடிக்கு அடிமையாவதை உணர்ந்ததால், கிராமங்கள் தோறும் முகாம்களை டி. டி. ரங்கநாதன் சிகிச்சை அமைப்பு நடத்தியது. குடிக்கு அடிமையானவர்களை மீட்கும் முயற்சியில் 1980 முதல் ஈடுபட்டு வருகின்றது.
- 1982இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது.
- ஐ. நா. விருது[1]
- தமிழக அரசின் 2015-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது[2][3].
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads