சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology) ஆண்டுதோறும் இந்தியாவில் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தினால் வழங்கப்படும் விருதாகும். இந்திய ரூபாயில் ஐந்து லட்சம் பணமுடிப்பும் பதக்க வில்லையும் புகழுரையும் பரிசாக இந்திய பிரதமரால் வழங்கப்படுகிறது. இதைத் தவிர மாதந்தோறும் ₹ 15000 பணமும் அன்னாரின் 65 வயது வரை வழங்கப்படுகிறது. இந்த விருது 45 வயதிற்குட்பட்டோருக்கு வழங்கப்படுகின்றது.[1]

2011ஆம் ஆண்டிற்கான கணிதத்திற்கான இவ்விருது கான்பூர் ஐ.ஐ.டியில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற, ’ரப்பர் ஷீட் ஜியோமெட்ரி’ எனும் கணிதப்பிரிவில் ஆய்வு செய்த பேலூர் ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த பல்கலைக் கழகத்தின் கணிதத்துறை தலைவர் மஹான் மகராஜின் கணித ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. இந்திய புள்ளியியல் மையத்தைச் சேர்ந்த பலாஷ் சர்க்கார் என்ற விஞ்ஞானியுடன் இந்த விருது பகிர்ந்துகொள்ளப்பட்டது.[2][3][4][5][6]

Remove ads

விருதுகள்

இந்த விருது அறிவியலில் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

  • உயிரியல் அறிவியல்
  • வேதியியல் அறிவியல்
  • பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல்
  • பொறியியல் அறிவியல்
  • கணித அறிவியல்
  • மருத்துவ அறிவியல்
  • இயற்பியல் அறிவியல்.

ஒவ்வொரு துறையிலும் பல வெற்றியாளர்களைக் கொண்டிருக்கலாம் (அதிகபட்சம் 2 நபர்கள்/ஆண்டு).[7] 2007 வரை பரிசுத் தொகை ₹2 லட்சமாக (US$2,700) இருந்தது. 2008 முதல் ₹5 லட்சமாக (US$6,600) உயர்த்தப்பட்டது.[8]

Remove ads

விருது பெற்றவர்கள்

விருது விழா

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் நிறுவன தினமான செப்டம்பர் 26 அன்று விருது பெறுநர்களின் பெயர்களை தலைமை இயக்குநர் அறிவிப்பார்.[9] இந்தியப் பிரதமர் இந்த விருதினை வழங்குவார். பொதுவாக விருது பெற்றவர் விருது தொடர்பான விரிவுரை ஒன்றை ஆற்றுவார்.[10]

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதின் அதிகாரபூர்வ இணையதளம்

http://ssbprize.gov.in/

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads