செ. சண்முகநாதன்

From Wikipedia, the free encyclopedia

செ. சண்முகநாதன்
Remove ads

சானா என்று அழைக்கப்படும் எஸ். சண்முகநாதன் (சனவரி 11, 1911 - 1979) இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குநர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர்.

விரைவான உண்மைகள் சானா சண்முகநாதன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் பிறந்தவர். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.

சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றினார். "சிலோன் சண்முகநாதன்" என்ற பெயரிலேயே நடித்திருந்தார். தேவகி என்ற திரைப்படத்தில் நட்டுவனார் வேடத்தில் நடித்தார்.

Remove ads

நடித்த புகழ்பெற்ற வானொலி நாடகங்கள்

  • லண்டன் கந்தையா
  • கொழும்பிலே கந்தையா
  • விதானையார் வீட்டில்

இயக்கிய மேடை நாடகங்கள்

  • சாணக்கியன்
  • பதியூர் ராணி

நடித்த திரைப்படங்கள்

  • டாக்சி டிரைவர்

எழுதிய நூல்கள்

  • பரியாரி பரமர் (நடைச்சித்திரங்களின் தொகுப்பு)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads