தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி (Mahajana College, Tellippalai) இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் அமைந்துள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[1][2]
Remove ads
வரலாறு
பாவலர் துரையப்பாபிள்ளையால் அவரது வீட்டில் திண்ணைப்பள்ளி ஒன்று 1910 ஆம் ஆண்டு ஆரம்பமானது. ஈராண்டு காலத்தில் கிராமமக்களின் கல்வியில் அக்கறை கொண்ட பாவலர் அரசாங்க உதவி எதுவுமின்றி அம்பனை கிராமத்தை நாடி 27 லாச்சம் காணியில் புதிய பாடசாலையை அமைத்தார்.
அவரது கடின உழைப்பின் பலனாக ஆரம்ப கல்விப்பிரிவாக சரஸ்வதி வித்தியாலயத்தையும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அதன் அருகே உயர் கல்விக்காக ரி (T) வடிவில் ஒரு கட்டிடத்தையும் அமைத்தார். பாவலர் 1929 ஆம் ஆண்டு காலமானார்.
அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர, அவரது உறவினரும் கல்விமானுமாகிய கா. சின்னப்பாவின் அயராத உழைப்பால் வளர்ச்சி கண்ட பாடசாலை இவரின் தலைமையிலேயே 1935 ஆம் ஆண்டு வெள்ளிவிழாக் கண்டது. இவர் தனது காலத்திலேயே இதுவரை ஆண்கள் மட்டுமே கல்விகற்ற பாடசாலையில் பெண்களும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையோடு பெண்களையும் இணைத்துக் கொண்டார்.
அவரின் மறைவைத் தொடர்ந்து ஆசிரியராகக் கடமையாற்றிய நிறுவனரின் மகன் ரி. ரி ஜெயரட்ணம் அதிபராகப் பதவி ஏற்றார். இரண்டு பிரிவாக இயங்கிய படசாலையை ‘மகாஜனா’ என்ற பெயரைச் சூட்டி ஒரு பாடசாலையாகக் கொண்டு வந்தார். இவரே கல்லூரிக்கான இலட்சனை, கல்லூரிக் கீதம் போன்றவற்றை உருவாக்க உதவினார். இவரது காலப்பகுதியிலேயே நட்டநடுவே மைதானம், சுற்றிவர அடக்கமான வகுப்பறைகள், ஓரத்தில் மாணவர் விடுதி, அதன் அருகே அழகிய நடேஸ்வரப்பெருமாள் ஆலயம், மறுகரையில் திறந்தவெளி அரங்கம், முன்புறத்தில் வானளாவி நிமிர்ந்து நிற்கும் துரையப்பா நினைவு மண்டபம் போன்றவை எழுந்தன. ஜெயரத்தினம் 1970ம் ஆண்டு அவர் பணி ஓய்வெடுத்தார்.
Remove ads
தலைமை ஆசிரியர்கள்
- தெ. து. ஜெயரத்தினம்
- மா. மகாதேவன்
- பொ. குமாரசாமி
- க. சிவசுப்ரமணியம்
- பொ. கனகசபாபதி
- பிரமஸ்ரீ கு. ச. இரட்னேஸ்வர ஐயர்
- பொன். சோமசுந்தரம்
- த. சண்முகசுந்தரம்
- வே. கந்தையா
- க. நாகராசா
- பொ. சுந்தரலிங்கம்
- ஆனந்தசயனன்
- கு. வேல்சிவானந்தன்
- ம. மணிசேகரன் (தற்பொழுது)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads