சாபஸ் நதீம்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாபஸ் நதீம் (பிறப்பு: ஆகஸ்ட் 12, 1989) இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2005 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 111 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2,132 ஓட்டங்களையும் , 109 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 842 ஓட்டங்களையும் ,1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். 14 வயதிற்குட்பட்ட பீகார் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ஜார்க்கண்ட் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.[1]
செப்டம்பர் 2018 இல், பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வீரருக்கான புதிய சாதனையை ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 10 ஓட்டங்களுக்கு எட்டு இலக்குகளைக் வீழ்த்தினார் .அவர் 2019 ஆம் ஆண்டில் இந்தியா தேசிய துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.
Remove ads
துடுப்பாட்டப் போட்டிகள்
முதல் தரத் துடுப்பாட்டம்
இவர் 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.2004 ஆம் ஆண்டில் ஜாம்செத்பூர் டிசம்பர் 4 இல் கேரளா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஜார்க்கண்ட் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் விளையாடினார்.[2]
இருபது20
2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 போட்டியில் அறிமுகமானார். ஏப்ரல் 3 இல் கான்பூரில் ஒரிசா துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் ஜார்க்கண்ட் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.
பட்டியல் அ
2005 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ போட்டியில் அறிமுகமானார். சனவரி 13, கொல்கத்தா ஒரிசா துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் ஜார்க்கண்ட் ஆ துடுப்பாட்ட அணி சார்பாக போட்டியில் விளையாடினார்.
Remove ads
சர்வதேச போட்டிகள்
2019 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 19, ராஞ்சியில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.4 ஓவர்களை மெய்டனாக வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் மட்டையாட்டத்தில் 5 பந்துகளில் ஓர் ஓட்டங்கள் எடுத்து இருதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 6 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். 1 ஓவர்களை மெய்டனாக வீசி 2 இலக்குகுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஓர் ஆட்டப் பகுதி மற்றும் 202 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads