ஷாமன் மதம்
மத நடைமுறை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆவி வழிபாட்டாளர்கள் அல்லது ஷாமன் மதம் என்பது ஒரு மதம் அல்லது பழக்கமாகும். இதில் ஒரு ஷாமன் அல்லது பயிற்சியாளர் மனநிலை மாறிய நிலைகளை அடைந்து, ஒரு ஆவி உலகத்தை உணர்ந்து, அதனுடன் தொடர்புகொண்டு அதன் ஆழ்ந்த ஆற்றல்களை இவ்வுலகிற்குக் கொண்டு வருகிறார்.[1]
ஒரு ஷாமன் என்பவர் நல்ல மற்றும் தீய ஆவிகள் உலகை அணுகக்கூடியவராகவும், செல்வாக்கு செலுத்துபவராகவும் கருதப்படுகிறார். பொதுவாக ஒரு சடங்கின் போது தன் நினைவிழந்த நிலைக்குள் நுழைகிறவராகவும், சோதிடம் சொல்பவராகவும் மற்றும் குணமடைய வைப்பவராகவும் கருதப்படுகிறார்.[2] "ஷாமன்" என்ற சொல் வடக்கு ஆசியாவின் துங்குசிக் எவங்கி மொழியில் இருந்து உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இனமொழியியலாளர் சுகா சன்குனனின் கூற்றுப்படி "இந்த சொல் அனைத்து துங்குசிக் சொற்றொடர்களிலும் சான்று கூறப்பட்டுள்ளது". இது நெகிதால், லமுத், உதேகே/ஒரோசி, இல்ச்சா, ஒரோக், மஞ்சூ மற்றும் உல்ச்சா ஆகிய அனைத்து மொழிகளிலும் உள்ளது. மேலும் அவர் "'ஷாமன்' என்பதன் பொருள் முன்-துங்குசிக் மொழியிலிருந்து பெறப்பட்டது என்ற ஊகத்திற்கு எதுவும் முரணாகத் தோன்றவில்லை" என்கிறார். இச்சொல் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்.[3] 1552ல் உருசிய படைகள் கசானின் ஷாமனிசக் கானேட்டை வெற்றி கொண்ட பிறகு மேற்கத்திய உலகத்திற்கு இந்த சொல் அறிமுகப்படுத்தப்பட்டது.
"ஷாமன் மதம்" என்ற சொல் முதன்முதலில் துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்கள், அதேபோல் அண்டையாவர்களான துங்குசிக் மற்றும் சமோயேதிக்-பேசும் மக்களின் பழங்கால மதத்தின் வெளிப்புறப் பார்வையாளர்களாக மேற்கத்திய மானுடவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டது. உலகெங்கிலும் அதிக மத பாரம்பரியங்களைக் கவனித்துப் பார்க்கையில், சில மேற்கத்திய மானுடவியலாளர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆத்திரலாசியா மற்றும் அமெரிக்காவின் முற்றிலும் தொடர்பற்ற பகுதிகள் ஆகியவற்றின் பிற பகுதிகளிலுள்ள இனரீதியான மதங்களுக்குள் காணப்படும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற மாய-மத நடைமுறைகளை விவரிக்க இந்த சொல்லை மிக பரந்த அளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.[4]
Remove ads
சொல்
சொற்பிறப்பு
"சாமன்" என்ற சொல் ஒருவேளை எவங்கி மொழியில் இருந்து உருவாகி இருக்கலாம். சிம் எவங்கி மக்களால் பேசப்பட்ட தென்கிழக்கு மொழியிலிருந்து பெரும்பாலும் இது உருவாகி இருக்கலாம்.[6]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads