சாமான்ய உபநிடதங்கள்
உபநிடதங்களின் தொகுப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமான்ய உபநிடதங்கள் ( Samanya Upanishads ) அல்லது சாமான்ய வேதாந்த உபநிடதங்கள் என்பது' இந்து மதத்தின் சிறிய உபநிடதங்கள் ஆகும். அவை பொதுவான இயல்புடையவை. பிற்காலத்தில் இயற்றப்பட்ட இவை மிகவும் பழமையானதாகவும் வேத பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டதாகவும் கருதப்படும் பதின்மூன்று முதன்மை உபநிடதங்களிலிருந்து தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. [1]
சாமான்ய உபநிடதம், யோகக் கலையுடன் தொடர்புடைய யோக உபநிடதங்கள், இந்து சமயத் துறவு மற்றும் துறவறம் தொடர்பான சந்நியாச உபநிடதங்கள், சைவ சமயத்துடன் தொடர்புடைய சைவ உபநிடதங்கள், வைணவத்துடன் தொடர்புடைய வைணவ உபநிடதங்கள் மற்றும் சக்தியுடன் தொடர்புடைய சாக்த உபநிடதங்கள் எனத் தொகுக்கப்பட்ட மற்ற சிறிய உபநிடதங்களுடன் முரண்படுகிறது.[1][2]
சாமான்ய வேதாந்த உபநிடதங்கள் 21 முதல் 24 வரையிலான பட்டியல் வரை பலவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3][4] சில பழைய முதன்மை உபநிடதங்கள் சாமன்ய உபநிடதங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதன் அடிப்படையில் எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளது. சில மூன்று பழங்கால உபநிடதங்களை சாமான்ய உபநிடதங்களாக உள்ளடக்கி, பட்டியலை 24:14க்கு கொண்டு வருகின்றன. சுவேதாசுவதர உபநிடதம்; 24. மைத்ராயனிய உபநிடதம்; மற்றும் 25. கௌசிதகி உபநிடதம். இம்மூன்றும் சாமான்ய உபநிடதங்களாகச் சேர்ந்தால், முதன்மையான உபநிடதங்களின் பட்டியல் பத்தாக சுருங்குகிறது. இருப்பினும், பல அறிஞர்கள் முதன்மை உபநிடதங்கள் பதின்மூன்று என்று கருதுகின்றனர்.[5][6][7]
Remove ads
பெயரிடல்
சாமான்யம் என்ற சொல்லுக்கு "பொதுவான, உலகளாவிய" என்று பொருள்.[8]
காலம்
முதன்மையான உபநிடதங்கள் கிமு எட்டாம் மற்றும் முதல் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை. சிறிய உபநிடதங்களுக்கான மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. மகோனியின் கூற்றுப்படி, சிறிய உபநிடதங்கள் தோராயமாக கிமு 100 முதல் கிபி 1100 வரை தேதியிடப்பட்டுள்ளன.[9]
21 சாமான்ய உபநிடதங்களின் பட்டியல்
பட்டியலில் வேறுபாடு
சாமான்ய உபநிடதங்களின் பட்டியல் அறிஞர்களைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, பிரம்மயோகியின் 24 பட்டியலில் அன்னபூர்ணா உபநிடதம், மைத்ரி உபநிஷத் மற்றும் கௌஷிதகி உபநிஷத் ஆகியவை சாமான்ய உபநிடதங்களாக அடங்கும்.[10]
இதனையும் பார்க்கவும்
சான்றுகள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads