சாமுண்டி கோயில், ஒடிசா

From Wikipedia, the free encyclopedia

சாமுண்டி கோயில், ஒடிசாmap
Remove ads

வைத்தல கோயில் அல்லது சாமுண்டி கோயில் (Vaitaḷa deuḷa or Baitala deuḷa) (Odia: ବଇତାଳ ଦେଉଳ, தேவநாகரி:वैताळ देउळ), கலிங்கக் கட்டிடக் கலையில், பொ.ஊ. எட்டாம் நுற்றாண்டில் கட்டப்பட்டு, தேவி சாமுண்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். இக்கோயில் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேசுவரம் நகரத்தின் அருகில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் வைத்தல கோயில்ବଇତାଳ ଦେଉଳ, அமைவிடம் ...
Remove ads

மூலவர்

இக்கோயிலின் மூலவரான சாமுண்டி தேவி, கழுத்தில் மண்டையோட்டு மாலையுடன், மனித பிணத்தின் மீது ஏறி நின்று, அருகில் குள்ள நரி மற்றும் ஆந்தையுடன் காட்சியளிக்கிறார். கவசம் தாங்கிய சாமுண்டா தேவியின் கைகளில் திரிசூலம், வில், அம்பு, வாள், இடி மற்றும் அசுரனின் தலையை பற்றி நிற்கிறாள். கருவறைச் சுவரில் சாமுண்டியின் துணையான பைரவர் மற்றும் பூத கணங்களின் சிற்பங்கள் உள்ளது. சிவன் மற்றும் பார்வதி அமர்ந்த நிலைச் சிற்பங்கள் கருவறைச் சுவர்களில் உள்ளது.

Remove ads

கட்டிடக்கலை

கலிங்கக் கட்டிடக்கலையில் அமைந்திருந்தாலும், கோயில் விமானம் மட்டும் திராவிடக் கட்டிடக்கலையில் உள்ளது. இக்கோயில் கோபுரத்தில் சிவன், பார்வதி சிற்பங்கள், காட்டு யானைகளை வேட்டையாடும் சிற்பங்கள் மற்றும் காதலர்களின் சிற்றின்பச் சிற்பங்கள் உள்ளது. [1][2]

மூலவர் சந்நதிக்கு எதிராக அமைந்த முகப்பு மண்டபம் சன்னல்களுடன் உள்ளது. சன்னல்களில் சூரியன் மற்றும் அவரது மனைவிகளான உஷா மற்றும் பிரதியுஷா, சூரிய தேவரின் தேரை இழுக்கும் ஏழு குதிரைகள், தேரோட்டி அருணன் முதலிய அழகிய சிற்பங்கள் கொண்டுள்ளது. இக்கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. முகப்பு மண்டப மேற்புறச் சுவரில் நடனமாடும் 10 கைகள் கொண்ட நடராசர் சிற்பமும், இரண்டு புத்தரைப் போன்ற சிற்பங்களும் காணப்படுகிறது.

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

வராகி கோயில்

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads