சாமை

From Wikipedia, the free encyclopedia

சாமை
Remove ads

சாமை (Panicum sumatrense, Little Millet) ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது.[1][2][3]

விரைவான உண்மைகள் சாமை, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

உணவு

இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யப்படுகிறது.

வேளாண்மை

  • ஐந்து கிலோ விதை சாமை கொண்டு பொதுவாக 1 ஏக்கருக்கு விதைக்கலாம்.
  • 80-ம் நாளில் கதிர் பிடித்து, 100 முதல் 110 நாட்களில் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்.
  • சாமை விதையின் அளவு மிக சிறியதாக இருப்பதால் அது முளைத்துவர ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும்.
  • விதைக்கும் முன்னர் சாமை விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி இளநீர் கரைசலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைப்பு செய்வதால், இளநீரில் உள்ள பொட்டாஷ் சத்தின் கராணமாக வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.
  • சாமைப் பயிரை அதிக பூச்சி நோய்கள் தாக்குவதில்லை.
  • மாதம் ஒரு முறை வீதம் இரண்டு முறை மட்டும் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரோடு கலந்து விடலாம்.
  • சாமை கதிர்கள் நன்று முற்றி காய்ந்த பின் அறுவடை செய்து, தானியங்களை பிரித்தெடுத்து சுத்தம் செய்து காய வைத்து சேமிக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கும்.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads