சாமோசின் எராயன்
கிரேக்க நாட்டின் சாமோசில் ஹீராவுக்கு உள்ள வழிபாட்டிடம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமோசின் எராயன் (Heraion of Samos) என்பது கிரேக்க நாட்டின், தீவான சாமோசில் உள்ள பண்டைய நகரமான சாமோசின் (நவீன பித்தகோரியன்) தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் ஹீரா தேவிக்கு அமைக்கபட்டு இருந்த ஒரு பெரிய கோயில் ஆகும். இது இம்ப்ராசோஸ் ஆற்றின் தாழ்வான, சதுப்பு நிலத்தில், அது கடலுக்குள் நுழையும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு உள்ள உள்ள தொன்மையான கோவில் பிரம்மாண்டமான அயனி கோவில்களில் முதன்மையானது, ஆனால் இந்த தளத்தில் இதன் முன்னோடி கோயில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு [1] அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது.[2] கோயிலின் இடிபாடுகள் கொண்ட தளம், இதன் ஒரே நிற்கும் நெடுவரிசை தூணுடன், 1992 இல் அருகிலுள்ள பித்தகோரியனுடன் இணைந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads