சாம்லி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம்லி மாவட்டம் (Shamli district) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சாம்லி ஆகும். இது சகரன்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.
இம்மாவட்டம் முசாபர்நகர் மாவட்டத்தின் மூன்று வட்டங்களைக் கொண்டு 28 செப்டம்பர் 2011 அன்று பிரபுத்த நகர் மாவட்டம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. மக்களின் எதிர்ப்பால் சூலை 2012 அன்று பிரபுத்த நகர் மாவட்டத்தின் பெயரை சாம்லி மாவட்டம் என மாற்றப்பட்டது. [1]
இம்மாவட்டம் தில்லியிலிருந்து கிழக்கே 100 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. கங்கைச் சமவெளியில் அமைந்த இம்மாவட்டத்தில் கரும்பு வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது.
Remove ads
அமைவிடம்
கங்கைச் சமவெளியில் யமுனை ஆற்றின் கிழக்கே அமைந்த இம்மாவட்டம், அரியானா - உத்தரப் பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது.
அருகில் உள்ள நகரங்கள்
- தில்லி பெருநகரம் 100 கி மீ.,
- பானிபட் நகரம் 35 கி மீ.,
- மீரட் நகரம் 70 கி மீ.,
- முசாபர்நகர் 38 கி மீ.,
- சகாரன்பூர் 65 கி மீ.,
- காசியாபாத் 120 கி மீ.,
மாவட்ட நிர்வாகம்
சாம்லி மாவட்டம் சாம்லி, கைரானா மற்றும் ஓன் (Oon) என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது. மேலும் ஊரக வளர்ச்சிக்காக தானாபவன், சாம்லி, ஓன் கந்துலா மற்றும் கைரானா என ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]
அரசியல்
இம்மாவட்டம் சாம்லி, தனபவன் மற்றும் கைரானா என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இம்மூன்று சட்டமன்ற தொகுதிகளும் கைரானா மக்களவைத் தொகுதியின் வருகிறது.
மக்கள் தொகையியல்
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் 12,73,578 ஆகும். அதில் ஆண்கள் 54% ஆகவும்; பெண்கள் 46% ஆகவும் உள்ளனர். கிராமப்புறங்களில் % மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் % வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். சராசரி படிப்பறிவு 59.5% ஆகவும்; ஆண்களின் படிப்பறிவு 64% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மொத்த மக்கள் தொகையில் 15% ஆக உள்ளனர்.
சமயம்
இம்மாவட்டத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவர்கள் மற்றும் இசுலாமிய சமய மக்கள் தொகை கூடுதலாகவும்; கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை குறைந்த அளவிலு உள்ளது.
மொழிகள்
உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Remove ads
பொருளாதாரம்
கங்கைச் சமவெளியில் அமைந்த இம்மாவட்டத்தில் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
கரும்பாலைகள், இரும்பாலைகள் மற்றும் காகித ஆலைகள் அதிகம் கொண்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads