சாம் கரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாமுவேல் மேத்தியூ கரன் (Samuel Matthew Curran, பிறப்பு: 3 சூன் 1998) என்பவர் ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் சர்ரே அணிக்காகவும் விளையாடி வருகிறார். கர்ரன் ஒரு இடது கை மட்டையாளரும் மற்றும் இடது கை மித வேகப் பந்து வீச்சாளரும் ஆவார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) 2018ஆம் ஆண்டில் ஆண்கள் துடுப்பாட்டத்தின் ஐந்து சிறந்த அடையாளங்களில் ஒருவராக கர்ரனை பெயரிட்டது, [1] விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்காட்டியின் 2019 பதிப்பானது இவரை ஆண்டின் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக தேர்வு செய்தது. இவர் இந்திய முதன்மைக் குழுப் (ஐபிஎல்) போட்டியில் 20 வயதில் மும்முறை எடுத்த இளைய பந்து வீச்சாளர் ஆவார்.[2] 2020 தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads