சாம் தம்பிமுத்து

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாமுவேல் பெனிங்டன் தவராசா தம்பிமுத்து (Samuel Pennington Thavarasa Tambimuttu, 1932 - 7 மே 1990) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் சாம் தம்பிமுத்துSam Tambimuttuwaa.u., இலங்கை நாடாளுமன்றம் மட்டக்களப்பு மாவட்டம் ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

தம்பிமுத்து 1932 ஆம் ஆண்டில் பிறந்தவர்.[1] இவர் இலங்கை அரசாங்க சபை உறுப்பினராக இருந்த ஈ. ஆர். தம்பிமுத்துவின் உறவினர் ஆவார்.[1][2] முன்னாள் மேலவை உறுப்பினர் எம். மாணிக்கம் என்பவரின் மகள் கலாவைத் திருமணம் புரிந்தார்.[1][3] இவர்களது மகன் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.[2]

பணி

தம்பிமுத்து வழக்கறிஞராக மட்டக்களப்பில் பணியாற்றினார்.[1][3] மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[4]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராகப் பல காலம் இருந்து செயல்பட்டார்.[3] 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

Remove ads

படுகொலை

தம்பிமுத்து கொழும்பில் உள்ள கனடா தூதரகத்தின் முன்னால் 1990 மே 7 ஆம் நாள் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3] இதன் போது படுகாயமடைந்த இவரது மனைவி கலா 1990 மே 16 அன்று மருத்துவமனையில் காலமானார்.[3] இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.[6][7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads