சார்சு
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி (Severe acute respiratory syndrome என்பதன் ஆங்கிலச் சுருக்கம் சார்சு) அல்லது கடுஞ்சுவாசக் கோளாறு ஓர் வழமையற்ற நுரையீரல் அழற்சி நோயாகும். இந்த மூச்சியக்க நோய் சார்சு கொரோனா தீ நுண்மத்தால் (SARS-CoV) மனிதர்களுக்கு ஏற்படுகிறது.[1] இது நவம்பர் 2002க்கும் சூலை 2003க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஆங்காங்கில் காணப்பட்ட இந்த நோய் திடீர் நோய்ப்பரவலாகி உலகளவில் 8,422 பேர் பாதிக்கப்பட்டு 916 பேர் உயிரிழந்தனர்.[2]உலக சுகாதார அமைப்பு நோயாளிகளில் 10.9% பேர் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது.[3] நோய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்நோய் பரவியது [4]
இன்றளவில் இந்த நோய் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சூன் 2003க்குப் பிறகு எந்த மனிதருக்கும் இந்நோய் ஏற்படவில்லை. இருப்பினும், பெரியம்மை போல இந்நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூற இயலாது; இதன் இயற்கை தேங்குமிடங்களான விலங்கினங்களில் இன்னும் இருப்பதால் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மனிதருக்கு தொற்று ஏற்பட தீ வாய்ப்புண்டு.
நோயுற்றவரில் இறப்பவரின் சதவீதம் 24 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 1% ஆகவும், 25இலிருந்து 44 வரை உள்ளோருக்கு 6% ஆகவும் 45 முதல் 64 வயதுடையோருக்கு 15% ஆகவும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு 50% க்கும் கூடுதலாகவும் உள்ளது.[5] ஒப்புமைக்காக, நுரையீரல் அழற்சியில் இறப்பு வீதம் வழமையாக ஏறத்தாழ 0.6% (முக்கியமாக வயதானோரில்)ஆக உள்ளது; புதிய தீ நுண்ம பரவல்களில் இது 33% வரை உயரக்கூடும்.
Remove ads
அறிகுறிகள்
இந்நோயின் ஆரம்பகால அறிகுறிகள் காய்ச்சல், தசைபிடிப்பு, சோம்பல், இருமல், தொண்டை புண் மற்றும் பிற குறிப்பிடப்படாத நோய்க்குறிகள் ஆகியவையாகும்.அனைத்து நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறி 38 டிகிரி செல்சியஸ் (100 டிகிரி பாரன்ஹீட் ) மேற்பட்ட காய்ச்சல் மட்டுமே ஆகும்.நோயாளிக்கு முதல் நிலை குளிர்காய்ச்சல் மூச்சு திணறல் போன்றவை ஏற்படலாம்.
கண்டறிதல்
பின்வரும் அறிகுறிகள் கொண்ட ஒருவருக்கு சார்ஸ் நோயானது இருக்கலாம்
- 38 டிகிரி செல்சியஸ் (100 டிகிரி பாரன்ஹீட்) அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள்
- 10 நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலங்களுக்கு சார்ஸ் நோய் கண்டறியப்பட்டுள்ள ஒருவருடன் (பாலியல் அல்லது சாதாரண உடல் தொடர்பில் இருத்தல்
- சார்ஸ் நோய் தாக்கியுள்ள பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டிருத்தல்
- மார்பு பகுதி ஊடுகதிர் படத்தில் நுரையீரலில் நிமோனியா அறிகுறிகள் தென்படுதல்
- இதை தவிர்த்து சார்ஸின் ஆரம்ப கால சோதனைகளுள் ஒன்றாக எலிசா நிமோனியா சோதனை மூலம் உறுதிசெய்யப்படுகிறது.
Remove ads
சிகிச்சைமுறை
கடுஞ்சுவாசக் கோளாறு (சார்ஸ்) ஒரு வைரஸ் நோயாக இருப்பதால் நுண்ணுயிர் கொல்லிகள் போன்ற மருந்துகள் பயனற்றதாக உள்ளது.சார்ஸ் சிகிச்சை ஆக்சிஜனை மற்றும் தேவையான செயற்கை காற்றோட்டத்தை வழங்குவதன் மூலம் சிகிச்சை அளிக்கபடுகிறது. சார்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக கருதப்படும் நோயாளிகள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க வெளி தொடர்புகள் எதுவும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படவேண்டும். சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு காரணமாக சார்ஸ் இன்னும் கடுமையான சேதத்தை விளைவிக்கும்,இதை சைடோகின் புயல் என்று அழைக்கப்படுகிறது. 2013 வரை மனிதர்கள் பயன்படுத்த பாதுகாப்பான எந்த சார்ஸ் சிகிச்சையும் அல்லது பாதுகாப்பு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.சார்ஸ் நோய்க்கான சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசி மருந்துகளை கண்டறிய உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது.மாஸ் பயோலஜிஸ் (MassBiologics) என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு விலங்குகளில் இந்நோய் தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர்.
சதிக் குற்றச்சாட்டு

மேற்கத்திய நாடுகள் சார்சு நோய் சீனாவின் உட்பகுதியில் பரவி வந்தபோது சீன மக்கள் குடியரசு இந்த நோய்ப்பரவல் குறித்த தகவல்களை மறைத்ததாலேயே மிக விரைவாக உலகெங்கும் பரவியதாக குற்றம் சாட்டின. அதே நேரத்தில் உருசிய அறிவியலாளர் செர்ஜி கோலெஸ்னிகோவ் சார்சு சதித்திட்ட கோட்பாடு என்று அறியப்படும் கருதுகோளுக்கு வித்தாக சார்சு தீ நுண்மம் இயற்கையாக உருவாக வகையில்லை என்றும் தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி தீ நுண்மங்களின் செயற்கை முறை கூட்டிணைவே சார்சு தீ நுண்மம் என்றும் ஆய்வறிக்கை வெளியிட்டார். இது ஓர் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என வாதிட்டார்.[6] முன்னதாக மற்றுமொரு உருசிய அறிவியலாளர் நிக்கொலாய் பிலடோவும் இது மனிதரால் உருவாக்கப்பட்ட தீ நுண்மமாக இருக்கலாம் என கருத்திட்டிருந்தார் .[7]இதனடிப்படையில் இந்த தீ நுண்மத்தை ஐக்கிய அமெரிக்கா வளர்ந்து வரும் சீன பொருளாதாரத்தை பாதிப்படையத் தொடர்ந்த உயிரியல் போராக சீனாவின் இணைய உரையாடல்களில் முதன்மை பெற்றது. நோய்க்காவி உயிரினம் கண்டறியப்படாத நிலையில் இந்தக் கருதுகோள் வலுப் பெற்றது. மாறாக தைவானும் அமெரிக்காவும் இது சீனாவினால் ஹாங்காங் வழியே உலக நாடுகளில் பரப்பப்பட்ட தீ நுண்மமாகக் கருதினர். சார்சு சதித்திட்ட ஆதரவாளர்கள் இறந்தவர்களில் சீனரே கூடுதலாக இருந்ததையும் மேற்கத்திய நாடுகளில் இது பரவாதிருந்ததையும் தங்கள் கருத்திற்கு சார்பாக இருப்பதாக வாதிட்டனர்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்களும் குறிப்புக்களும்
மேலும் அறிய
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads