சார்தீனியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சார்தீனியா (Sardinia) என்பது மத்திய தரைக்கடல் கடலில் அமைந்துள்ள இரண்டாவது பெரியதீவு ஆகும். இந்த தீவு இத்தாலிய தீபகற்பத்திற்கு மேற்கே, துனிசியாவின் வடக்கே, பிரெஞ்சு தீவான கோர்சிகாவின் தெற்கே அமைந்துள்ளது. சார்தீனியா அரசியல் ரீதியாக இத்தாலியின் ஒரு பகுதி ஆகும். ஒரு குறிப்பிட்ட சட்டத்தால்வழங்கப்பட்ட ஓரளவு உள்நாட்டு சுயாட்சியைப் பெறுகிறது.[1] இந்த தீவு நான்கு மாகாணங்களாகவும் ஒரு பெருநகரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. காக்லியாரி பிராந்தியத்தின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது. இத்தீவு உலகில் அதிக வாழ்நாளைக் கொண்ட மனிதர்கள் வாழும் நீல மண்டலத்தில் உள்ளது.


மலைகள், காடுகள், சமவெளிகள், பெரும்பாலும் மக்கள் வசிக்காத பிரதேசங்கள், நீரோடைகள், பாறைக் கடற்கரைகள் மற்றும் நீண்ட மணற் கடற்கரைகள் உள்ளிட்ட அதன் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பல்வேறு காரணங்களால் இந்த தீவு ஒரு மிகச் சிறிய கண்டமாக உருவகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] நவீன சகாப்தத்தில் பல பயணிகளும் எழுத்தாளர்களும் இந்த நிலப்பரப்பின் நிலப்பரப்பின் அழகைப் புகழ்ந்துள்ளனர். இது நூராஜிக் நாகரிகத்தின் பகுதிகளை கொண்டுள்ளது.[3]
Remove ads
புவியியல்
இந்த தீவு 24,100 சதுர கிலோமீற்றர் (9,305 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. மத்தியதரைக் கடலில் இரண்டாவது பெரிய தீவு சார்தீனியா ஆகும். இது 38 ° 51 'மற்றும் 41 ° 18' அட்சரேகை வடக்கேயும், 8 ° 8 'மற்றும் 9 ° 50' கிழக்கு தீர்க்கரேகைக்கு இடையே அமைந்துள்ளது. சார்தீனியாவின் மேற்கில் மத்தியதரைக் கடலில் சார்தீனியா கடல் அமைந்து உள்ளது. சார்தீனியாவின் கிழக்கே டைஹெரியன் கடல் மத்திய தரைக்கடலில் அமைந்துள்ளது.[4]
மத்தியதரைக் கடலின் டைர்ஹெனியன் கடல் பகுதி சார்தீனியாவின் கிழக்கே நேரடியாக சார்தீனிய கிழக்கு கடற்கரைக்கும் இத்தாலிய பிரதான தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைக்கும் இடையில் உள்ளது. போனிஃபாசியோ நீரிணை சார்தீனியாவிற்கு நேரடியாக வடக்கே, சார்தீனியாவை பிரெஞ்சு தீவான கோர்சிகாவிலிருந்து பிரிக்கிறது.
இந்த தீவு ஒரு பண்டைய புவிசார் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் சிசிலி மற்றும் இத்தாலியின் பிரதான நிலப்பகுதியைப் போலல்லாமல் பூகம்பத்தால் பாதிக்கப்படாது. இங்கு அமைந்துள்ள பாறைகள் பாலியோசோயிக் சகாப்தத்தின் (500 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை) பாறைகளாகும்.
இந்த தீவில் ஏராளமான ஆறுகள், மலைச் சிகரங்கள், பெரிய ஆழமற்ற உப்பு நீர் தடாகங்கள் மற்றும் குளங்கள் என்பன அமைந்துள்ளன.
Remove ads
காலநிலை
ஆண்டின் குளிர்காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் மழைப்பொழிவு அதிக அளவில் உள்ளது. வசந்த காலத்தில் சில கன மழை மற்றும் மலைப்பகுதிகளில் பனிப்பொழிகின்றது. சராசரி வெப்பநிலை லேசான குளிர்காலம், வெப்பமான கோடைகளில் 11 முதல் 17 °C வரை (52 முதல் 63 °F)வரையும், சனவரியில் வெப்பநிலை (9 முதல் 11 °C (48 முதல் 52 °F) ஆகவும், சூலையில் 23 முதல் 26 °C (73 - 79 °F வரை) ஆகவும் காணப்படும். குளிர்ந்த குளிர்காலம் மற்றும் மலைகளில் குளிர்ந்த கோடை காலத்தில் சனவரியில் வெப்பநிலை ( −2 முதல் 4 °C (28 முதல் 39 °F) ஆகவும், சூலையில் 16 முதல் 20 °C ( 61 முதல் 68 °F) வரையும் காணப்படும். சார்தீனியா ஒப்பீட்டளவில் பெரியதாகவும், மலைப்பாங்கானதாகவும் இருப்பதால், வானிலை சீரானதாக இல்லை. குறிப்பாக கிழக்கு பகுதி வறண்டது. ஆனால் முரண்பாடாக இது மிக மோசமான மழைக்காலங்களை அனுபவிக்கிறது.
Remove ads
பொருளாதாரம்
சார்தீனியாவின் பொருளாதார நிலைமைகள் ரோமின் தெற்கே அமைந்துள்ள இத்தாலிய பிராந்தியங்களில் நிலையை பெற்றுள்ளது. காக்லியாரி மற்றும் சசாரி மாகாணங்களில் உள்நாட்டில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது.
மூன்று முக்கிய வங்கிகள் சார்டினியாவில் தலைமையகங்களை கொண்டுள்ளன. எவ்வாறாயினும், பாங்கோ டி சர்தெக்னா மற்றும் பாங்கா டி சசாரி ஆகிய இரண்டும் சசாரியில் உள்ளன. அவை நிலப்பரப்பை தளமாகக் கொண்ட பாங்கா போபோலேர் டெல் எமிலியா-ரோமக்னாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாங்கா டி கிரெடிட்டோ சர்டோ காக்லியாரியை தலைமையிடமாக கொண்டது.
2008 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 8.6% ஆகும். 2012 ஆண்டிற்குள் வேலையின்மை விகிதம் 14.6% ஆக உயர்ந்தது.[5] சார்தீனிய ஏற்றுமதியைத் தாக்கிய உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக வேலையின்மையில் உயர்வு ஏற்பட்டது. பின்னர் முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ரசாயன பொருட்கள் மற்றும் சுரங்க மற்றும் உலோகவியல் தயாரிப்புகளில் கவனம் செலுத்தியது.
வேலையின்மை விகிதம் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 11.2% ஆகக் குறைந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 1.8% அதிகமாகும். தெற்கு இத்தாலிய பகுதிகளை விட 5.3% குறைவாக (16.5%) என்று இத்தாலிய தேசிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.[6]
விவசாயம், மீன்பிடித்தல், கட்டுமானத் துறை, வர்த்தகம், உணவகங்கள், சுற்றுலாத் துறை, நிதி செயல்பாடுகள் என்பன இத் தீவின் பொருளதாரத்தில் பங்கு வகிக்கின்றன.
புள்ளி விபரங்கள்
சார்தீனியா இத்தாலியில் நான்காவது குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதி ஆகும். சராசரி ஆயுட்காலம் 82 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக உள்ளது.[7] (பெண்களுக்கு 85 மற்றும் ஆண்களுக்கு 79.7 ) ஜப்பானிய தீவான ஒகினாவாவுடன் சார்தீனியா பகிர்ந்து கொள்கிறது. 2016 ஆம் ஆண்டில் 50,346 வெளிநாட்டு தேசிய குடியிருப்பாளர்கள் காணப்பட்டனர். இது மொத்த சார்தீனிய மக்களில் 3% வீதம் ஆகும்.[8]
இதனையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads