சார்லசு டிகால் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் (Paris Charles de Gaulle Airport, French: Aéroport Paris-Charles de Gaulle, ஐஏடிஏ: CDG, ஐசிஏஓ: LFPG), மேலும் ருவாய்சி வானூர்தி நிலையம் (அல்லது பிரான்சியத்தில் சுருக்கமாக ருவாய்சி) என அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் பிரான்சின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் உலகின் முதன்மை வான்வழி மையங்களில் ஒன்றும் ஆகும். இது ஐந்தாவது பிரெஞ்சு குடியரசின் நிறுவனரும் கட்டற்ற பிரெஞ்சுப் படையின் தலைவருமான சார்லஸ் டி கோல் (1890–1970) நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது பாரிசின் வடகிழக்கே 25 km (16 mi)[2] தொலைவில் அமைந்துள்ளது. ஏர் பிரான்சின் முதன்மை முனைய நடுவமாக சேவையாற்றுகிறது.
2012இல் இந்த நிலையம் 61,556,202 பயணிகளையும் 497,763 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது.[5] உலகின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் ஐரோப்பாவில் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தரவரிசையில் உலகின் பத்தாவதாகவும் ஐரோப்பாவில் முதலாவதாகவும் விளங்குகிறது. 2011இல் சரக்கு போக்குவரத்தில் 2,087,952 மெட்றிக் டன்களை கையாண்ட இந்த நிலையம் உலகளவில் ஐந்தாவதாகவும் ஐரோப்பாவில் பிராங்க்புர்ட் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.[5]
Remove ads
மேற்சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads