சாலஞ்சர் விண்ணோடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலஞ்சர் விண்ணோடம் (Space Shuttle Challenger) (மீள்விண்கலம்) என்பது நாசாவின் கொலம்பியா விண்ணோடத்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோடம் ஆகும். இதன் முதலாவது பயணம் ஏப்ரல் 4, 1983 இல் இடம்பெற்றதில் இருந்து மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் ஜனவரி 28, 1986 இல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 வினாடிகளில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் என்டெவர் விண்ணோடம் தயாரிக்கப்பட்டு 1992இல் முதற்தடவையாக ஏவப்பட்டது.
Remove ads
சாலஞ்சர் பயணங்கள்
Remove ads
சாலஞ்சரின் அழிவு

சாலஞ்சர் ஜனவரி 28, 1986 இல் தனது பத்தாவது பயணத்தில் STS-51-L என்ற விண்கலத்தை சுமந்து புளோரிடா, கனாவரல் முனை (Cape Canaveral, Florida) ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் செல்லும் போது, திடீரெனப் பழுது ஏற்பட்டு வானில் வெடித்தது. அதில் பயணஞ்செய்து கொல்லப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவர்[1].
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads