சாலிசா பஞ்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலிசா பஞ்சம் (Chalisa famine) 1783-84 காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம். அக்காலகட்டத்தில் நிகழ்ந்த எல் நீனோ பருவநிலை மாற்றத்தால் இப்பஞ்சம் ஏற்பட்டது. சாலீசா என்பதற்கு ”நாற்பதாவது ஆண்டின்” என்று பொருள். இந்தியில் “சாலீஸ்” என்றால் நாற்பது. இந்து சம்வத் நாட்காட்டியின் படி 1840 ஆம் ஆண்டு (1783) இப்பஞ்சம் நிகழ்ந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.[1][2]

வட இந்தியாவின் பல பகுதிகள் இப்பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக தில்லி, தற்கால உத்தரப் பிரதேசம், கிழக்கு பஞ்சாப், ராஜபுதானா, காஷ்மீர் போன்ற பகுதிகள் பாதிக்கபப்ட்டன. இவை அனைத்தும் இந்திய மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்தன. இதற்கு முந்தைய ஆண்டு (1782-83) தென்னிந்தியாவின் பல பகுதிகளைப் பஞ்சம் தாக்கியிருந்தது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து சென்னை போன்ற பகுதிகளையும் ஐதர் அலியின் கட்டுப்பாட்டிலிருந்த மைசூர் அரசின் பல பகுதிகளையும் இப்பஞ்சம் தாக்கியது. இவ்விரு பஞ்சங்களால் ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் மாண்டனர்.[1][3]
Remove ads
மேலும் பார்க்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads