சாலே சாயிட் கெருவாக்

மலேசிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சாலே சாயிட் கெருவாக்
Remove ads

சாலே சாயிட் கெருவாக் (ஆங்கிலம்; Salleh Said Keruak; மலாய்: Datuk Seri Panglima Dr Mohamed Salleh bin Tun Haji Mohamed Said) (பிறப்பு: 10 சூலை 1958) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 28 டிசம்பர் 1994 முதல் 26 மே 1996 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 9-ஆவது முதலமைச்சராகவும்; 29 சூலை 2015 முதல் 10 மே 2018 வரை மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சராகவும்; 31 டிசம்பர் 2010 முதல் 28 ஜூலை 2015 வரை மலேசியா, சபா மாநில சட்டமன்றத் தலைவராகவும்; 19 பிப்ரவரி 1994 முதல் சபா, உசுக்கான் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சேவை செய்தவர் ஆவார்.

விரைவான உண்மைகள் மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர், பிரதமர் ...

மேலும் இவர் சபா மாநிலத்தின் 4-ஆவது முதலமைச்சராகவும்; சபா மாநிலத்தின் 7-ஆவது ஆளுநராகவும் பணியாற்றிய முகமட் சாயிட் கெருவாக் அவர்களின் மகனும் ஆவார்.[1]

Remove ads

பொது

இவர் கனடா, வான்கூவர், சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டதாரி; மேலும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.

பட்டப் படிப்பை முடித்த பிறகு, 1984-இல் கோத்தா பெலுட் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1986 முதல் 1994 வரை ஜோசப் பைரின் கித்திங்கான்; மற்றும் சக்காரான் டன்டாய் ஆகிய சபா முதல்வர்களின் அரசியல் செயலாளராகப் பணியாற்றினார்.

அத்துடன், அவர் சபாவின் அமைச்சரவையில் சில பதவிகளையும் வகித்தார். பல ஆண்டுகளாக, அவர் சபா மாநிலத்தின் நிதி அமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், வீட்டுவசதி மற்றும் துணை முதல்வராகவும் பணியாற்றினார்.

Remove ads

அரசியல் வாழ்க்கை

28 டிசம்பர் 1994 அன்று, பிரதமர் மகாதீர் முகமது அவரை சபா மாநிலத்தின் முதலமைச்சராக நியமித்தார். சபா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவரின் பதவிக்காலம் 26 மே 1996-இல் முடிவடைந்தது. இவருக்குப் பின்னர் சபா முற்போக்கு கட்சியின் (SAPP) தலைவரான யோங் தெக் லீ சபா மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

4 சனவரி 2010 அன்று, அப்போதைய சபா முதலமைச்சர் மூசா அமான், அவரை தன் அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமித்தார். அதே ஆண்டு திசம்பர் 31 அன்று, அவர் சபா மாநில சட்டமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2][3]

6 அக்டோபர் 2019 அன்று, மக்கள் நீதிக் கட்சியில் (பிகேஆர்) சேர்வதற்கு உறுப்பினர் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக ஒப்புக் கொண்டார். இருப்பினும் 30 சூன் 2020 அன்று, 2020 அரசியல் நெருக்கடிக்குப் பிறகு மக்கள் நீதிக் கட்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை அவர் மீட்டுக் கொண்டார்.[4] 9 செப்டம்பர் 2020 அன்று, மீண்டும் அம்னோவில் இணைந்தார்.[5]

Remove ads

விருதுகள்

மலேசிய விருதுகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads