சாளக்கிராமம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
Remove ads
சாளக்கிராம வகைகள்
பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம்,[1].சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.[2]
Remove ads
நீதிமன்ற சாட்சி
பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ’சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது.[2]
புராணக் குறிப்புகள்
- மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.[2]
- கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.[2]
சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது.[2]
ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி
சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது,[2]
ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும்
ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன.[2]
துவாரகா சிலா
சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர்.[2]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads