சா. எ. இருங்கநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திவான் பகதூர் சர் சாமுவேல் எபினேசர் இருங்கநாதன் ( 1877 திசம்பர் 30 - 1966 நவம்பர் 7) [1] [2] இரங்கநாதன் எனவும் அழைக்கப்படும் இவர், இந்திய கல்வியாளர் ஆவார், இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 1943 முதல் 1947 இந்தியாவின் கடைசித் துணைத் தூதராகவும் பணியாற்றினார். [3]
வாழ்க்கை
இருங்கநாதன் லண்டன் தொண்டு அமைப்பின் ரெவரெண்ட் சி. ருங்கநாதனுக்கு பிறந்தார். 1908ஆம் ஆண்டில், இவர் சென்னை மாகாண கல்விப் பணியில் சேர்ந்தார். மேலும் 1921ஆம் ஆண்டில் இந்திய கல்விச் சேவைக்கு உயர்த்தப்பட்டார். இது அதுவரை முக்கியமாக பிரித்தானிய கல்வியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. [4]சென்னையைச் சேர்ந்த கே. கிருஷ்ணா ராவின் மகள் லீலா ராவ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.
Remove ads
பணிகள்
1929 முதல் 1935 வரை, இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். அப்போது 1931இல் எடின்பரோவில் நடைபெற்ற பேரரசின் பல்கலைக்கழகங்களின் மாநாட்டின் பிரதிநிதியாக இருந்தார். பின்னர் 1937 முதல் 1940 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். சென்னை, இந்தியக் கிறிஸ்தவச் சங்கத்தின் தலைவராகவும், அகில இந்திய கிறிஸ்தவ மாநாட்டின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1938ஆம் ஆண்டில், சென்னை மாகாணத்தின் சட்டமன்றக் குழுவின் மேலவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940ஆம் ஆண்டு வரை இவர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் ஆலோசகராக பணியாற்றினார். 1938-1939ல், இவர் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வாரியத்தின் தலைவராக இருந்தார். [5]
Remove ads
கௌரவம்
1937ஆம் ஆண்டில் திவான் பகதூர் எனக் குறிப்பிட்டு, 1943 புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இடம் பெற்றார். மேலும், மே 1943இல் இந்தியாவின் கடைசி உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். [4] [6] [7] இவர் உயர் ஸ்தானிகராக இருந்த காலத்தில், வங்காள பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, £40,000 திரட்டினார். இவர் திசம்பர் 1942இல் பசிபிக் உறவுகள் நிறுவனத்தின் மாநாட்டிற்கான பிரதிநிதியாகவும், 1945 சர்வதேச தொழிலாளர் மாநாடு (பாரிஸ்), 1946 மாநாடு (மொண்ட்ரியால்) மற்றும் 1946இல் பாரிஸ் அமைதி மாநாட்டிற்கான இந்திய பிரதிநிதிகளின் தலைவராகவுமிருந்து இந்தியா சார்பாக அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். [8]
இறப்பு
இந்திய விடுதலைக்கு சற்று முன்னர் ஏப்ரல் 1947இல் உயர் ஸ்தானிகராக ஓய்வு பெற்றவர், பெங்களூரில் தனது 88 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads