சிகிரியா

இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia

சிகிரியா
Remove ads

சிகிரியா (Sigiriya / Lion Rock; சிங்களம்: සීගිරිය) இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) பயன்படுத்தினான் . கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் சிகிரியா Ancient City of Sigiriya, வகை ...
Remove ads

வரலாறு

காசியப்பன் தாதுசேன மன்னனின் 2 ஆவது மனைவிக்கு பிறந்த மகனாவான். தாதுசேனனுக்குப் பின் பட்டத்து இராணிக்குப் பிறந்த முகலனுக்கே அரச உரிமையுண்டு. எனினும் காசியப்பன் தந்தையைக் கொன்று, சிகிரியாவில் கோட்டை அமைத்து அரசாட்சி எய்தினான்.

ஒவியங்களின் சிறப்பு

இக் குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்களை தேவதைகள் என சிலரும், காசியப்பனின் மனைவிகள் என சிலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும், சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இருக்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

Remove ads

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads