சிக்கல் (நாகப்பட்டினம்)
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிக்கல் (ஆங்கிலம்:Sikkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் வட்டத்தில், நாகப்பட்டினத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இதனை சிக்கற்பள்ளி என தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]
Remove ads
அமைவிடம்
நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 6 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் 20 கி. மீ. தொலைவிலும், கீழ்வேளூர் ஊரில் இருந்து கிழக்கில் 6 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் கோவில் மிகவும் புகழ் பெற்றது.[1] இங்கு சூரசம்கார விழா விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் சிக்கல் நவநீதேசுவரர் கோவில் சிவன் கோயிலும் அமைந்துள்ளது.[2]
பாடல் பெற்ற தலம்
திருஞான சம்பந்தர் இவ்வூரிலுள்ள 'வெண்ணெய்ப் பெருமான' (நவநீதேசுவரனை)ப் பாடியுள்ளார்.
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய
அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.
வரலாற்றுச் சிறப்பு
கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் இவ்வூருக்கு வந்து மருத்துவம் செய்துக்கொண்டதாக வரலாற்றில் உள்ளது.
நிர்வாகம்
- மாவட்டம்: நாகப்பட்டினம்
- வருவாய் கோட்டம்: நாகப்பட்டினம்
- வட்டம்: நாகப்பட்டினம்
- வருவாய் கிராமம்: சிக்கல்
- ஊராட்சி ஒன்றியம்: நாகப்பட்டினம்
- ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து): சிக்கல்
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads