சிச்சென் இட்சா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பியாவுக்கு முந்தைய சகாப்தம் (ஆரம்ப நவீன காலம்) முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரிகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயன் நாகரிகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.


சிச்சென் இட்சா அழிபாடுகள் நடுவண் அரசின் சொத்து. எனினும் களத்தைக் காக்கும் பொறுப்பை மெக்சிக்கோவின் மானிடவியல், வரலாற்றுத் தேசிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலங்கள் 29 மார்ச் 2010 வரை தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்நிலங்களை இப்போது யுக்கட்டான் மாநிலம் விலைகொடுத்து வாங்கியுள்ளது.
யுனெசுகோவின் பாரம்பரியச் சின்னமாக சிச்சென் இட்சா அறிவிக்கப்பட்டது. சிச்சென் இட்சா சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[1]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads