சிட்டகொங்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிட்டகொங் (Chittagong) (வங்காளம்: চট্টগ্রাম, Chôţţogram) பங்களாதேசத்தின் தென்கிழக்கில் உள்ள ஓர் துறைமுக மாநகரமாகும். இது தன்பெயரிலேயே வழங்கும் சிட்டகாங் கோட்டம் மற்றும் சிட்டகாங் மாவட்டம் இரண்டிற்கும் நிர்வாகத் தலைமையிட நகரம ஆகும். கர்ணபூலி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் வங்காளதேசத்தின் மிக நடமாட்டமிக்க கடல் துறைமுகம் ஆகும். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகொங்கின் மக்கள்தொகை 2.5 மில்லியன்.[2]

விரைவான உண்மைகள் சிட்டகொங் (சட்டோகிராம்) চট্টগ্রাম, நாடு ...

சிட்டகொங் மலைத்தொடர்களுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே அமைந்துள்ள சிட்டகொங் வங்காளதேசத்தின் முதன்மை வணிக மற்றும் தொழில் நகரமாகும். சிட்டகொங் துறைமுகம் வழியேதான் நாட்டின் பெரும்பான்மையான ஏற்றுமதி/இறக்குமதிகள் நடக்கின்றன.மேலும் வடகிழக்கு இந்தியா, நேபாளம்,பூடான், தென்கிழக்கு சீனாமற்றும் மியான்மார் ஆகியவற்றிற்கு இடைவழி சரக்கமாகச் செயல்பட துறைமுகத்தில் பல மேம்படுத்தல்களை வங்காளதேச அரசு மேற்கொண்டுள்ளது. [3][4][5] பன்னாட்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக் கழக அறிக்கையின்படி, உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் சிட்டகொங்கும் ஒன்று.[6] நகரின் பல பகுதிகள் குன்றுகளால் சூழப்பட்டுள்ளமையால் விரைவான வளர்ச்சி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.[7]

16வது,17வது நூற்றாண்டுகளில் இது போர்த்துக்கீசியர்களின் கீழ் போர்ட் கிராண்ட் என்றும் [8] இசுலாமாபாத்என்றும் அழைக்கப்பட்டது.[9] [10][11]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads