மியான்மர்

தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia

மியான்மர்
Remove ads

மியான்மர் அல்லது மியான்மா (Myanmar),[d] அதிகாரபூர்வமாக மியான்மர் ஒன்றியக் குடியரசு (Republic of the Union of Myanmar) அல்லது பர்மா (Burma, 1989 வரை) என்பது வடமேற்கு தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு. இது இந்தோசீனாவில் பரப்பளவில் பெரிய நாடாகும், இங்கு 55 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடமேற்கே இந்தியா, வங்காளதேசம் ஆகியனவும், வடகிழக்கே சீனா, கிழக்கு, தென்கிழக்கே லாவோஸ், தாய்லாந்து ஆகியனவும், தெற்கு, தென்மேற்கே அந்தமான் கடலும், வங்காள விரிகுடாவும் உள்ளன. இதன் தலைநகரம் நைப்பியிதோ, மிகப்பெரிய நகரம் யங்கோன் (முன்னைய இரங்கூன்) ஆகும்.[13]

விரைவான உண்மைகள் மியான்மர் ஒன்றியக் குடியரசுRepublic of the Union of Myanmar, தலைநகரம் ...

இந்தப் பகுதியில் தொடக்ககால நாகரிகங்கள் மேல் மியான்மரில் உள்ள திபெத்திய-பர்மிய மொழிகள் பேசும் பியூ நகர-மாநிலங்கள், கீழ் மியான்மரில் உள்ள மோன் இராச்சியங்கள் ஆகியவை அடங்கும்.[14] 9- ஆம் நூற்றாண்டில், பாமர் மக்கள் மேல் ஐராவதி பள்ளத்தாக்கில் நுழைந்தனர். 1050களில் பாகன் இராச்சியம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பருமிய மொழி, கலாச்சாரம், தேரவாத பௌத்தம் மெதுவாக நாட்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. பாகன் இராச்சியம் மங்கோலியப் படையெடுப்புகளுக்கு வீழ்ந்ததைத் தொடர்ந்து, மேலும் பல போரிடும் மாநிலங்கள் தோன்றின. 16 ஆம் நூற்றாண்டில், டாங்கு வம்சத்தால் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட இந்த நாடு, தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றில் ஒரு குறுகிய காலத்திற்கு மிகப்பெரிய பேரரசாக மாறியது.[15] 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோன்பவுங் வம்சம் நவீன மியான்மரை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஆட்சி செய்தது, அத்துடன் அசாம், லுசாய் மலைகள், மற்றும் மணிப்பூரையும் சிறிது காலம் கட்டுப்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டில் மூன்று ஆங்கிலோ-பர்மியப் போர்களுக்குப் பிறகு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மியான்மரின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. இதை அடுத்து பர்மா ஒரு பிரித்தானியக் குடியேற்ற நாடாக மாறியது. ஒரு சுருக்கமான சப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, மியான்மர் நேச நாடுகளால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1947-ஆம் ஆண்டு பர்மா சுதந்திரச் சட்டம் 1947 விதிமுறைகளின் கீழ், 1948 சனவரி 4 அன்று மியான்மர் விடுதலையை அறிவித்தது.

மியான்மரின் விடுதலைக்குப் பிந்தைய வரலாறு இன்றுவரை தொடர்ச்சியான அமைதியின்மையாலும் மோதல்களாளும் தடைப்பட்டுள்ளது. 1962-இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு பர்மா சோசலிசத் திட்டக் கட்சியின் கீழ் ஒரு இராணுவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்தது. 1988 ஆகத்து 8 அன்று, '8888 எழுச்சி]] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெயரளவிலான பல கட்சி முறைக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது, ஆனால் நாட்டின் எழுச்சிக்குப் பிந்தைய இராணுவக் குழு அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுத்து, இன்றுவரை நாட்டை ஆட்சி செய்து வருகிறது. நாடு எண்ணற்ற இனக்குழுக்களிடையே இனக்கலவரங்களால் பிளவுபட்டுள்ளது, மியான்மர் உள்நாட்டுப் போர் உலகின் மிக நீண்ட காலமாக நடந்து வரும் உள்நாட்டுப் போர்களில் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் உட்பட்ட பல அமைப்புகள் நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன.[16] 2010 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்குழு அதிகாரப்பூர்வமாக 2011 இல் கலைக்கப்பட்டு, பெயரளவிலான அரசு நிறுவப்பட்டது. ஆங் சான் சூச்சி உட்பட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 2015-இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது, இது வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்தவும் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் வழிவகுத்தது,[17] இருப்பினும், குறிப்பாக உரோகிங்கியா மோதல் தொடர்பாக, அதன் சிறுபான்மை இனத்தவரை நாடு நடத்தும் விதம் பன்னாட்டளவில் பதற்றத்தைத் தோற்றுவித்தது.[18] 2020 மியான்மர் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, ஆங் சான் சூச்சியின் கட்சி இரு அவைகளிலும் தெளிவான பெரும்பான்மையைப் பெற்றது, பர்மிய இராணுவம் மீண்டும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.[19] சர்வதேச சமூகத்தால் பரவலாகக் கண்டிக்கப்பட்ட இந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மியான்மரில் தொடர்ச்சியான பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், தொடர் உள்நாட்டுப் போரும் வெடித்தது.[20] ஆங் சான் சூச்சியை பொது வாழ்க்கையிலிருந்து அகற்றுவதற்காக ஊழல் முதல் கோவிடு-19 நெறிமுறைகளை மீறியமை வரையிலான குற்றங்களைச் சுமத்தி இராணுவம் அவரைக் கைது செய்தது.[21]

மியான்மர் கிழக்காசியக் கூட்டமைப்பு, கூட்டுசேரா இயக்கம், தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது, ஆனாலும் ஒரு காலத்தில் பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும் பொதுநலவாய நாடுகளில் உறுப்பினராக இருக்கவில்லை. மியான்மர் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பேச்சுவார்த்தை உறுப்பினராக உள்ளது. பச்சை மாணிக்கக்கல், இரத்தினக் கற்கள், எண்ணெய், இயற்கை எரிவளி, தேக்கு , பிற கனிமங்கள் போன்ற இயற்கை வளங்களால் இந்த நாடு மிகவும் வளமானது, அத்துடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் வளப்படுத்தப்பட்டுள்ளது, பெரும் மீக்காங் துணைப் பகுதியின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக சூரிய மின்னாற்றல் திறனைக் கொண்டுள்ளது.[22] இருப்பினும், மியான்மர் நீண்ட காலமாக உறுதியற்ற தன்மை, பிரிவினை வன்முறை, ஊழல், மோசமான உள்கட்டமைப்பு, மற்றும் மனித வளர்ச்சியைப் பொருட்படுத்தாமல் குடியேற்றகாலச் சுரண்டலின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.[23] 2013 இல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு) 56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், கொள்வனவு ஆற்றல் சமநிலை 221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.[24] [27] பொருளாதாரத்தின் பெரும்பகுதி இராணுவ ஆட்சிக்குழுவின் பங்காளிகளால் கட்டுப்படுத்தப்படுவதால், இங்கு வருமான இடைவெளி உலகிலேயே மிகப் பெரியதகும்.[25] [28] மியான்மர் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகும்.[12] 2021 முதல், உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய ஆட்சிக் கவிழ்ப்பு காரணமாக மியான்மர் முழுவதும் 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.[26] ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் படி, 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகலிடம் கோருபவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளனர், திசம்பர் 2024 நிலவரப்படி 3.5 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.[27]

Remove ads

சொற்பிறப்பு (பெயர் வரலாறு)

1989ல், இராணுவ அரசாங்கம் பர்மாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்திலும், அதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்ட பல பெயர்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை அதிகாரபூர்வமாக மாற்றியது. தனது நாட்டின் பெயரான "பர்மாவை" "மியன்மார்" என மாற்றியதும் இதற்குள் அடங்குகிறது. மிகுதி பெயர்மாற்றங்கள் போட்டியிட்ட சிக்கல்களாகவே விளங்குகின்றன.[28] பல அரசியல் மற்றும் இன எதிர்புக் குழுக்களும், நாடுகளும் "பர்மா" என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன. ஏனென்றால், அவை ஆட்சி செய்கின்ற இராணுவ அரசாங்கத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்காமையினாலேயே ஆகும். அல்லது அதன் பெயர்மாற்றல் அதிகாரத்தினாலேயோ இருக்கலாம்.[29]

மியன்மார் நாட்டின் அதிகாரபூர்வமான முழுப்பெயர் "மியன்மார் ஒன்றியக் குடியரசு" (ஆங்கிலம் : "Republic of the Union of Myanmar", ပြည်ထောင်စုသမ္မတ မြန်မာနိုင်ငံတော်, Pyidaunzu Thanmăda Myăma Nainngandaw, pjìdàʊɴzṵ θàɴməda̰ mjəmà nàɪɴŋàɴdɔ̀) ஆகும். மியன்மார் என்ற பெயரை பயன்படுத்த விரும்பாமல் பழைய காலத்து பெயரையே பயன்படுத்த விரும்பும் நாடுகள் "பர்மா குடியரசு" (ஆங்கிலம் : "Union of Burma" )என அழைக்கின்றன.[30][31]

ஆங்கிலத்தில், இந்த நாடு பிரசித்தியாக "பர்மா" ("Burma") என்றோ அல்லது "மியன்மார்" ("Myanmar") /ˈmjɑːnˌmɑːr/ (கேட்க) அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பெயர்களும் பர்மியர்களின் பெரும்பான்மை இனக்குழுவான பாமர்களிடமிருந்தே பெறப்பட்டன. மியன்மார் என்ற பெயர் இந்த பாமர் இனக்குழுவின் எழுத்து வழக்கு பெயராகும். பர்மா என்ற பெயர் "பாமர்" என்பதில் இருந்து வந்ததாகும். இப்பெயர் பாமர் இனக்குழுவின் பேச்சு வழக்கு பெயராகும். பதிவின் படி பார்க்கையில், இவற்றின் உச்சரிப்பு பாமா (pronounced: [bəmà]) அல்லது மியமா (pronounced: [mjəmà]) என்று வருகின்றன. 18ஆம் நூற்றாண்டிலிருந்து "பர்மா" என்ற பெயர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் முன்னைய இந்து, சமசுகிருதம் போன்றவற்றின் வேதங்கள் பர்மாவில் ब्रह्मावर्त / ब्रह्मदेश (பிரம்மவார்ட்/ பிரமதேசு, Brahmavart/Brahmadesh). இது 'இந்துக் கடவுள் பிரம்மாவின் பூமி' ('Land of Hindu god Bramha') எனக் குறிப்பிடுகிறது.

ஆத்திரேலியா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற பல நாடுகளின் அரசாங்கம் ஆங்கிலத்தில் பர்மா என்ற பெயரை பயன்படுத்த ஆதரிக்கின்றன.[32][33] அதிகாரபூர்வ ஐக்கிய அமெரிக்க நாடுகள் கொள்கை பர்மா என்ற பெயரையே இந்நாட்டிற்கு வைத்துள்ளது. இருப்பினும் ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் வலைத்தளம் இந்நாட்டின் பெயரை "பர்மா (மியன்மார்)" என்றே பட்டியலிட்டுள்ளது. பராக் ஒபாமா மியன்மார் நாட்டிற்கு இரண்டு பெயர்களையும் குறிப்பிட்டிருக்கின்றார்.[34][35][36] செக் குடியரசு அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது, இருப்பினும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது வலைத்தளத்தில் மியன்மார், பர்மா ஆகிய இரு பெயர்களையும் பயன்படுத்தியுள்ளது. [37] தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, உருசியா, ஜெர்மனி,[38] சீனா, இந்தியா, நோர்வே,[39] மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைப் போன்று ஐக்கிய நாடுகள் அவையும் மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றது.[32]

பிபிசி,[40] சிஎன்என்,[41] அல் ஜசீரா,[42] ராய்ட்டர்ஸ்,[43] மற்றும் ஆர்டி (ரசியா டுடே) உள்ளிட்ட அதிகமான ஆங்கில மொழி மூலமான செய்தி ஊடகங்கள் அதிகாரபூர்வமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றன.

இசுப்பானியம், இத்தாலியன், உரோமானியன் போன்ற மொழிகளில் மியன்மார் "பிர்மானியா" ("Birmania") என்று அழைக்கப்படுகின்றது. "பிர்மானியா" என்பது பர்மா என்பதின் இசுப்பானிய மொழிபெயர்ப்பாகும். மியன்மார் போர்த்துக்கேய மொழியில் "பிர்மனியா" ("Birmânia") என்றும், பிரான்சிய மொழியில் "பிர்மனி" ("Birmanie") என்றும் அழைக்கப்படுகின்றது.[44] பிரேசில், போர்த்துக்கல் போன்ற போர்த்துகேய மொழி பேசும் நாடுகளும், பிரான்சு போன்ற பிரெஞ்ச் மொழி பேசும் நாடுகளும் தற்போது பிரதானமாக மியன்மார் என்ற பெயரையே பயன்படுத்துகின்றன.[45]

Remove ads

வரலாறு

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பகுதியில் 750,000 ஆண்டுகளுக்கு முன்பே ஓமோ இரெக்டசுக்கள் வாழ்ந்ததாக தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. 75,000 ஆண்டுகளுக்கு முன்பு எரெக்டசு கண்டுபிடிக்கப்படவில்லை.[46] மத்திய மியான்மரில் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ஓமோ சேப்பியன்களின் முதல் சான்றுகள் சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முந்தையவை எனக் கருதப்படுகிறது.[47] புதிய கற்காலத்தில் தாவரங்களையும் விலங்குகளையும் வளர்ப்பதற்கான சான்றுகளும், மெருகூட்டப்பட்ட கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கான சான்றுகளும் கிமு 10,000 முதல் 6,000 வரையிலான படா-லின் குகைகளில் உள்ள குகை ஓவியங்களின் வடிவத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[48]

வெண்கலக் காலம் கிமு 1500 ஆம் ஆண்டு வந்தபோது, அப்பகுதியில் மக்கள் செப்பை வெண்கலமாக மாற்றி, அரிசி பயிரிட்டு, கோழி, பன்றிகளை வீட்டில் வளர்த்தனர்; உலகில் முதன்முதலில் அவ்வாறு செய்தவர்களில் இவர்களும் அடங்குவர்.[49] இந்தக் காலத்தைச் சேர்ந்த மனித எச்சங்களும் கலைப்பொருட்களும் சாகைங்கில் உள்ள மோனிவா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.[50] இரும்புக் காலம் கிமு 500-ஆம் ஆண்டு வாக்கில் இன்றைய மண்டலையின் தெற்கே இரும்பு வேலை செய்யும் குடியிருப்புகள் தோன்றியதன் மூலம் தொடங்கியது.[51] கிமு 500 முதல் கிபி 200 வரை சீனா வரை தங்கள் சுற்றுப்புறங்களுடன் வணிகம் செய்த பெரிய கிராமங்களும், சிறிய நகரங்களின் அரிசி வளரும் குடியிருப்புகளும் இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.[52] இரும்புக் கால பர்மியக் கலாச்சாரங்கள் இந்தியா, தாய்லாந்து போன்ற வெளிப்புற மூலங்களிலிருந்தும் தாக்கங்களைக் கொண்டிருந்தன, இது குழந்தை நல்லடக்கம் தொடர்பான அவர்களின் இறுதிச் சடங்கு நடைமுறைகளில் காணப்படுகிறது. இது மியான்மர் பிற இடங்களில் உள்ள குழுக்களுடன் வணிகம் மூலம் கொண்டிருந்த சில வகையான தொடர்புகளைக் குறிக்கிறது.[53]

Remove ads

மியான்மர் இந்தியர்கள் வெளியேற்றம்

ஜெனரல் நீ வின் ராணுவம் 1962 இல் ஆட்சியை கைப்பற்றி உடன் இந்தியர்களை வெளியேற்றும் வேலை ஆரம்பம் ஆனது. தனியார் வசம் இருந்த வியாபார நிறுவங்கள் தேசியமயம் ஆக்கப்பட்டு நஷ்டஈடு தராமல் தேசியமயம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்பட்டன, மூன்று லட்சம் இந்தியர்கள் தங்கள் சொத்து சுகங்களை இழந்து வெறும் 175 கியாட் பணத்துடன் உயிருக்கு அஞ்சி வெளியேறினர்.

இதன் அதிகமான சுதந்திர ஆண்டுகளில், மியன்மார் பெருத்த இனக் கலவரத்திற்காளாகியிருந்தது. மியன்மாரின் எண்ணற்ற இனக் குழுக்கள் நீண்ட நடக்கும் உள்நாட்டு போர்களுள் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு பல அமைப்புக்களும் நாட்டில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக நிலையாகவும், ஒரு முறையாகவும் அறிக்கை வெளியிட்டன.[54][55][56] 2011இல், இராணுவ ஆட்சிக் குழு அதிகாரப்பூர்வமாக 2010 பொதுத் தேர்தலில் ஈடுபட்டு, பெயரளவில் சிவிலிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. முன்னாள் இராணுவ தலைவர்கள் நாட்டில் இன்னும் மகத்தான சக்தியை பிரயோகிக்க என்னும் பொது, பர்மிய இராணுவம் அரசாங்க ஆதிக்கத்தை அகற்றுவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டனர். இதன் காரணமாக ஆங் சான் சூச்சி மற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், நாட்டின் மனித உரிமைகள் அறிக்கையும், வெளிநாட்டு உறவும் மேம்படுத்தப்பட்டது. இதனால் வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார தடைகளும் தளர்த்தப்பட்டன.[57][58] ஆயினும், அரசாங்கத்தின் முசுலிம் ரோகிஞ்சா சிறுபான்மை சிறுபான்மை சிகிச்சை பற்றியும், மத மோதல்கள்களைக் கருத்தில் கொள்வது குறைவு பற்றியும் தொடர்ந்தும் விமர்சனம் வெளியாகின்றன. [59][60][61] 2015 தேர்தலில், ஆங் சான் சூச்சியின் கட்சி இரு இல்லங்களிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தது.

மியன்மார் ஜேட், இரத்தினங்கள், எண்ணெய், இயற்கை எரிவளி மற்றும் மற்ற கனியுப்பு வளங்களில் சிறந்து விளங்குகிறது. 2013ல், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு) $56.7 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) $221.5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றன.[24] மியன்மாரில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகில் மிகப் பரந்தளவின் மத்தியில், பொருளாதாரத்தின் அதிகமான விகிதம் முன்னாள் இராணுவ அரசாங்க ஆதாவாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.[62][63] 2013 இன் படி, மனித மேம்பாட்டுச் சுட்டெணின் (HDI) அடிப்படையில் மியன்மார் 187 நாடுகளில் 150 ஆவது இடத்தில், மிகவும் குறைந்த அளவிலான மனித மேம்பாட்டுடன் விளங்குகிறது.

12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.

பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது விகாரைகளின் பூமி ('Land of Pagodas') என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "[[சுவேதகோன் விகாரை]" மிகவும் புகழ் பெற்றது. மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.

பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.

தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி ஆறு படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.மணி வளங்கள் நிறைந்த நாடு. தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர். தற்போது இங்கு முஸ்லீம்களில் ஒரு பிரிவான ரோஹிங்கிய என்பவர்களுக்கும் மற்ற பிரிவினர்களுக்குகிடையே அடிக்கடி பிரச்சனை எழுகிறது. [64]

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. முன்னாள் "இரங்கூன்"
    • கணக்கிடப்பட்ட (50,279,900) மற்றும் கணக்கிடப்படாத (51,486,253) மக்கள்தொகை உட்பட மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த மக்கள்தொகையின் அடிப்படையில், இராகினி மாநிலத்தில் கணக்கிடப்படாத மக்கள்தொகை இசுலாமிய நம்பிக்கையுடன் தொடர்புடையது என்ற அனுமானத்தின் அடிப்படையில்.
    • 2017 ஆம் ஆண்டு முதல் ரோகிஞ்சா மக்கள் அதிக அளவில் வெளியேறியதன் காரணமாக, திசம்பர் 2019 நிலவரப்படி, மியான்மரின் மொத்த மக்கள்தொகையில் முசுலிம்கள் 3% க்கும் குறைவாகவே இருக்கலாம்.[6]
  2. ஆன்மவாதம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
  3. பர்மியம்: မြန်မာ; MLCTS: Mranma, mjəmà
    Remove ads

    மேற்கோள்கள்

    உசாத்துணைகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads