சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்(Chittagong Divisional Stadium), தற்போது சோகுர் அகமது சௌத்ரி அரங்கம் (Zohur Ahmed Chowdhury Stadium) என்றும் முன்பு பீர் சிரேசுதா சாகித் ருகுல் அமீன் அரங்கம்(Bir Shrestha Shahid Ruhul Amin Stadium) என அறியப்பட்டது, வங்காள தேசத்தின் தென்கிழக்கில் உள்ள சிட்டகொங் நகரில் அமைந்துள்ள ஓர் விளையாட்டரங்கமாகும். பிப்ரவரி 27, 2006 இல் இலங்கைக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே நடந்த தேர்வுத் துடுப்பாட்டம் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட அரங்கமானது.[1][2][3]

விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...

சிட்டகொங் நகரத்திலிருந்து அரைமணிநேர பயணத்தில் அமைந்துள்ள இந்த அரங்கம் 2004ஆம் ஆண்டு 19-கீழ் உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட ஐந்து மைதானங்களில் ஒன்றாகும். சனவரி, 2006இல் பன்னாட்டுத் தரமுள்ள அரங்கமாக ஒப்புமை வழங்கப்பட்டது. வேளாண் நிலங்களின் மத்தியில் திண்காறை கட்டிடமாக விளங்கும் இந்த அரங்கத்தில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள 20,000 கொள்ளளவு கொண்ட பார்வையாளர் இருக்கைகள் அமைந்துள்ளன.

22°21′20.89″N 91°46′04.51″E

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads