சிட்டிசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிட்டிசன் (Citizen) 2001 ஆம் ஆண்டில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இது எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் அஜித் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் தேவா உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
Remove ads
திரைக்கதை
ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்தப்படுகின்றனர். இதற்கு சிட்டிசன் (அஜித்) என்பவரே உரிமை கோருகின்றார். மத்திய புலனாய்வுப் பிரிவு அலுவலர் சரோஜினி (நக்மா) இவற்றைப் ஆராய்ந்தபோது இவர்கள் அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்துடன் தொடர்பிருந்தமையும் அதில் இருந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி அழித்தொழிந்து போயிருந்தமை தெரியவருகின்றது. பல்லாண்டுகளுக்கு முன்னர் இக்கிராமத்தில் ஒரு கூட்டுப் படுகொலை நிகழ்ந்ததும் தெரியவருகின்றது. பின்னர் திரையில் சிட்டிசன் 20 வருடங்களிற்கு முன்னர் சிறுவனாக இருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தெரியவருகின்றது.
Remove ads
நடிப்பு
பாடல்கள்
தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றன. பாடகர் திப்பு பாடிய மேற்கே உதிக்கும் சூரியனே எனும் பாடல் மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பாடலாகும். அனைத்து பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து. "ஐ லைக் யூ" என்ற பாடல் ஐ பீல் லோன்லி என்ற பாடலை ஒத்திருந்தது. "பூக்காரா" என்னும் பாட்டு டேக் எ சேன்ஸ் ஆன் மீ என்னும் பாடலில் சாயலில் இருந்தது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads