மீனா (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

மீனா (நடிகை)
Remove ads

மீனா (Meena, பிறப்பு: 16 செப்டம்பர், 1976) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும்.[2] 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், சப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் மீனா, பிறப்பு ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

மீனா துரைராஜ் 1976 இல் பிறந்தார். தமிழ்நாட்டில் (அப்போதைய சென்னையில்) வளர்ந்தார். இவரது தாய் கேரளா கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் , தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர்.[3][4]  மீனா தனது எட்டாம் வகுப்பை சென்னையில் உள்ள வித்யோதயா பள்ளியில் முடித்தார். சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடித்ததால் தனது கல்வியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், இவர் தனது 10 ஆம் வகுப்பை தனியார் பயிற்சியுடன் தேர்ச்சி பெற்றார். 2006 ஆம் ஆண்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டம் பெற்றார். மீனா பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞராவார். இவர் சரளமாக தமிழ்தெலுங்கு, மலையாளம்கன்னடம்இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பேசுபவர்.

Remove ads

குடும்ப வாழ்க்கை

மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009 சூலை 12 அன்று ஆர்ய வைஸ்ய சமாஜ் மண்டபத்தில் திருமணம் செய்தார்.[5] பின்னர் இருவரும் ஆந்திரப் பிரதேசத்தின் திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றனர். தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருவரும் சென்னைக்கு திரும்பினர். இவர்களின் மகள் நைனிகா தனது 5 வயதில் தெறி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.[6]

மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக 2022 சூன் 28 அன்று காலமானார்.[7]

Remove ads

குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads