சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் (ஏப்ரல் 20, 1910 - ஜூன் 24, 2006) மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், பட்டதாரி ஆசிரியர்.
அகில இந்திய வானொலியின் இதழான வானொலி இதழின் பொறுப்பாசிரியராகவும் முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர். 1875இல் ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர். (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் இது வெளியானது).
Remove ads
விருதுகள்
- ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்டவர்.
- 1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ரோல் ஆஃப் ஹானர் விருது வழங்கப் பெற்றவர்.
- தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும் - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.
எழுதிய நூல்கள்
- அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)
- சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
- கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)
- தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சோ. சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)
- நடந்தாய் வாழி காவேரி (தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதிய பயணநூல்)
தமிழ் மொழிபெயர்ப்புகள்
- கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, Verrier Elwin, Lester Brown, JS Pruthi ஆகியோர் நூல்கள்
ஆங்கிலப் படைப்புகள்
- தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
- தி பரமாச்சார்யா
வெளி இணைப்புகள்
- சிட்டி என்றொரு தகவல் பெட்டகம் பரணிடப்பட்டது 2012-01-20 at the வந்தவழி இயந்திரம், திருப்பூர் கிருஷ்ணன், தினமணி, 23 சனவரி 2011
- சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
- சிட்டி என்னும் சிரிப்பாளி - நரசய்யா
- சிட்டியின் பதிவுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads