சித்தார்கோட்டை

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

சித்தார்கோட்டைmap
Remove ads

சித்தார்கோட்டை (ஆங்கிலம் : Chittarkottai) தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல் அமைப்பு:

இவ்வூரின் அமைவிடம் 9°25′38″N 78°54′15″E ஆகும். சித்தார்கோட்டை இராமநாதபுரத்திலிருந்து சாலை வழியாக 13 கி.மீ. ஆகும். இராமநாதபுரத்திற்கு வட கிழக்காவும் தேவிபட்டிணத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் செல்லும் வழி இதன் வழியாகச் செல்கின்றது. கடற்கரை 3 கி.மி தொலைவில் உள்ளது.

சுற்றியுள்ள கிரமங்கள

சித்தார்கோட்டை பஞ்சாயாத்தில் ஏழு கிராமங்கள் உள்ளன. வாழூர், பழனிவலசை, முடிவீரன்பட்டினம், குலசேகரக்கால், அம்மாரி, ஜமீன்தார்வலசை மற்றும் இலந்தைக் கூட்டம் இதில் அடங்கும்.

மக்கள் வகைப்பாடு

சித்தார்கோட்டை மற்றும் வாழூரில் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள். பெரும்பகுதியான மக்கள் வெளிநாடுகளில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பலர் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ளனர். முடிவீரன்பட்டிணம் மற்றும் பழனிவழசை உள்ளவர்கள் பெரும்பகுதி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பழனிவழசையில் விவசயாயமும் செய்கின்றனர்.

கல்வி அறிவு

முன்பு பெண்களும் கிராமத்தில் உள்ளவர்களும் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சித்தார்கோட்டையின் முஹமதியா மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சியால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 80% சதம் பெண்களும் ஆண்களும் தற்போது படித்துள்ளனர்.[4] வாலிபால விளையாடில் இராமநாதபுரம் மாவட்டில் சித்தார்கோட்டை பள்ளி தனித்துவம் பெற்று பல வெற்றிகளை குவித்துள்ளது பள்ளி மாணவர்கள் ச்சு, கட்டுரை, கவிதை பே எட்டிகளில் பல விருதுகளையும் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Remove ads

அமைப்புகள்

சித்தார்கோட்டையில் முஸ்லிம் தர்மபரிபாலண சபா என்ற அமைப்பு உள்ளது. இது ஊரின் நிர்வாகத்தை சீராக செய்து வருகின்றது. அதே போல பொதுப் பணிகளுக்காக வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகத்தை ஏற்படுத்தி விளையாட்டையும், தமிழையும் வளர்க்கின்றது. கிராமங்களிலும் கிரமா நிர்வாக சபை முறையே நடைபெற்று வருகிறது. அந்தந்த ஊர்களின் பிரச்சனைகள், திருமணம் போன்ற காரியங்கள் இதன் மூலம் நடைபெறுகின்றது.

அதே போன்று அனைத்து கிரமாம சபை நிர்வாகத்திற்கிடையே மிக நல்ல உறவு உள்ளதால் அனைவர்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஹிந்து முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவர்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

இணையதளங்கள:

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads